பொது செய்தி

இந்தியா

10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தலாம்: மத்திய அரசு அனுமதி

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020
Share
Advertisement
10th, 12th, Board Exams, Home Ministry, Centre's guidelines, உள்துறைஅமைச்சகம், பொதுத்தேர்வு, அனுமதி,

புதுடில்லி: தள்ளிவைக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நெறிமுறைகள்படி நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தமிழகத்திலும், ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் ஜூன் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டன. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின் பேரில், உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


latest tamil news


நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாநில கல்வி வாரியங்கள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பாடத்திட்டங்களில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை நடத்த முடியாமல் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகளை நடத்திக் கொள்ள அனுமதி கேட்டு மாநில அரசுகள் மற்றும் சிபிஎஸ்இ தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு ஊரடங்கு காலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை நடத்திக் கொள்ள தளர்வு அறிவிக்கப்படுகிறது.


latest tamil news


மேலும், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்கக்கூடாது. ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்; உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு வசதியாக பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X