கொரோனா விசாரணைக்கு ஆஸி., ஆதரவு| Dinamalar

கொரோனா விசாரணைக்கு ஆஸி., ஆதரவு

Added : மே 20, 2020
Share

கேன்பெரா: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான, உலக சுகாதார அமைப்பின் சுதந்திரமான விசாரணையை வரவேற்பதாக, ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அத்துடன், தங்கள் நாட்டின் பார்லியின் இறக்குமதி வரியை, சீனா, 80 சதவீதம் உயர்த்தியுள்ளதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய உடனே, சீனாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என, முதன் முதலாக ஆஸ்திரேலியா தான் குரல் கொடுத்தது. இதனால் ஆத்திரமடைந்த சீனா, கடந்த வாரம், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நான்கு நிறுவனங்களின் மாட்டிறைச்சி இறக்குமதிக்கு தடை விதித்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X