புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம்; எதிர்கட்சிகள் அரசியல்: நிர்மலா குற்றச்சாட்டு

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

புதுடில்லி: ஏழைகளின் கைகளுக்கு பணத்தை நேரடியாக கொடுப்பது மட்டுமே தீர்வு அல்ல என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.latest tamil newsஇது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது: தொழிலாளர் சட்டங்களை திருத்துவது பார்லி., ஆய்வுக்கு உட்பட்ட விசயம் என்று கூறிய அவர் ஏழைகளின் கைகளுக்கு பணத்தை நேரடியாக கொடுப்பது மட்டுமே தீர்வு அல்ல . மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார தொகுப்பில் ஊரக வேலைவாய்ப்பு, எளிதான வங்கி கடன், கொள்கை சீர்திருத்தம் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. என கூறினார்.


latest tamil news
மேலும் அவர் கூறுகையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தை எதிர்கட்சிகள் தங்களது அரசியல் லாபத்திற்கு பயன்படுத்துவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை 5 கட்டமாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-மே-202000:01:07 IST Report Abuse
தமிழ்வேல் ezhaikalin paavam unggalaiyellaam summaa vidaathu.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-மே-202023:28:22 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் மூடர் கூடம் குறட்டை விட்டு தூங்குது. எழுப்பினா எரிச்சல் வந்து கூவுகிறார்கள்.
Rate this:
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
20-மே-202022:39:25 IST Report Abuse
ராம.ராசு இக்கட்டான இப்போதைய நிலையில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் சரியோ தவறோ ஆனால், எதிர் கட்சி என்றாலே "எதிர்ப்பு" அரசியல் செய்வது அரசியலில் எதார்த்த நடைமுறை. அது இப்போதைய ஆளும் கட்சிக்கும் பொருந்தும். இப்போது அனைத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ள ஆதார் அட்டை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைசிவரை நாடாளுமன்றத்தையே முடக்கியது. சென்ற ஆட்சியின் போது நான்கு முறை மட்டுமே ATM இல் பணம் எடுக்கலாம் அதற்க்கு மேலென்றால் காட்டணம் என்று சொன்னபோது, மக்கள் அவர்கள் பணத்தை எடுப்பதற்கு கட்டுப்பாடா என்று போராட்டம் செய்யப்பட்டது. இப்போது எது எதற்கோ காட்டணம் என்றாகிவிட்டது. கச்சா எண்ணெய் பேரல் ரூபாய் 140 இருந்தபோது பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 70 விற்றபோது மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்திய தற்போதைய ஆளும் கட்சி, தற்போது கச்சா எண்ணெய் ரூபாய் 30 க்குக் கீழே குறைந்தபோதும், ஒரு லிட்டர் விலை ரூபாய் 75 ஆக உள்ளது. தனிப்பெரும்பான்மை இருக்கிறது என்பதால், கொரோனா பற்றி கருத்துச் சொன்ன எதிர்கட்சிகளின் ஆலோசனையைக் கூட கண்டுகொள்ளப்படவில்லை. இப்போது அதிகப்படியான தொற்று இருக்கும்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், குறைவான அளவில் தொற்று இருக்கும்போது எதிர்க்கட்சி சொன்ன ஆலோசனைப்படி பிப்ரவரி மாதத்திலேயே போதிய அவகாசம் கொடுத்து, மக்கள் விரும்பியவாறு புலம் பெயர்வதற்கு ஏற்பாடு செய்து இருந்தால், இப்போது அந்த மக்கள் துயரப்படும் நிலை வந்திருக்காது என்பதே, தற்போதைய எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டு. எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும், குறைகளைச் சுட்டிக்காட்டும் நிலை இருக்கவே இருக்கும். என்றாலும், இப்போதைய ஐம்பது நாட்களுக்கு மேலான ஊரடங்கால் புலம் பெயரும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X