பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம்

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் அடுத்த கந்தர்பால் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அடுத்த பாண்டச் சவுக் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 முதல் 3 பயங்கரவாதிகள் பி.எஸ்.எப் வீரர்கள் மீது சரமாரியாக
BSF, shot dead, Kashmir, BSF personnel, militant attack, Jammu and Kashmir, காஷ்மீர், வீரமரணம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் அடுத்த கந்தர்பால் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அடுத்த பாண்டச் சவுக் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 முதல் 3 பயங்கரவாதிகள் பி.எஸ்.எப் வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் தலையில் படுகாயம் அடைந்தார்.


latest tamil news


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சவுராவில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவமனைக்கு , படுகாயமடைந்த வீரரை அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவர்கள், மருத்துவமனை கொண்டு வரும் வழியிலேயே இரண்டு வீரர்களும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். வீரமரணம் அடைந்த வீரர்களின் வயது 35 முதல் 36 வரை இருக்குமென கூறினர்.

தெற்கு காஷ்மீரில் மே முதல் வாரத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியான ரியாஸ் நைக்கூ பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டான். அதனை தொடர்ந்து ஸ்ரீநகரில் நேற்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதியும் ஒரு மூத்த பிரிவினைவாத தலைவரின் மகனும் ஜுனைத் செஹ்ராய் கொல்லப்பட்ட நிலையில், வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
23-மே-202014:46:47 IST Report Abuse
 Muruga Vel பாகிஸ்தானை போல ரிட்டயர்டு ராணுவ வீரர்களை குடியுரிமை கொடுத்து தங்க வைக்கலாம் .. வேலையற்ற இளைஞர்களை அங்கு விவசாயம் செய்ய நிலம் கொடுத்து தங்க வைக்கலாம் .. மிஞ்சி போனால் ஐம்பது அறுபது லட்சம் மக்கள் தானே காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்காங்க ..
Rate this:
Cancel
பேப்பர்காரன் - Trichy,இந்தியா
20-மே-202022:23:48 IST Report Abuse
பேப்பர்காரன் muttaal moorka koottam
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X