ரசிகர்களுக்கு பதிலாக செக்ஸ் பொம்மைகள்: தென்கொரியாவில் புது சர்ச்சை

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சியோல் : தென்கொரியாவில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியின் போது, ரசிகர்கள் இருப்பதை போன்று உணர்வதற்காக மைதானத்தின் இருக்கைகளில் செக்ஸ் பொம்மைகளை வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பின் முதன்முறையாக தென்கொரியாவில் கே லீக் கால்பந்து தொடர் கடந்த 8ம் தேதி துவங்கியது. குவாங்ஜு அணியுடன் மோதிய எப்.சி சியோல் 1 -0 என்ற கோல்கணக்கில் வெற்றி
south korea, sex dolls, FC, seoul, controversy, தென்கொரியா,

சியோல் : தென்கொரியாவில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியின் போது, ரசிகர்கள் இருப்பதை போன்று உணர்வதற்காக மைதானத்தின் இருக்கைகளில் செக்ஸ் பொம்மைகளை வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பின் முதன்முறையாக தென்கொரியாவில் கே லீக் கால்பந்து தொடர் கடந்த 8ம் தேதி துவங்கியது. குவாங்ஜு அணியுடன் மோதிய எப்.சி சியோல் 1 -0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் சுமார் 19 மில்லியன் பேர் கால்பந்து போட்டியை டிவியில் பார்த்து ரசித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் இன்றி, காலியாக உள்ள மைதானத்தில் நடந்த போட்டியின் போது, எப்.சி சியோல் கிளப் அணி, ரசிகர்கள் இருப்பது போன்று உணர்வதற்காக செக்ஸ் பொம்மைகளை இருக்கைகளில் வைத்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


ரசிகர்கள் கடும் எதிர்வினையை தொடர்ந்து எப்.சி சியோல் அணி தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியது. ஆனால் ஒரு கூட்டத்தைப் பிரதிபலிக்கும் விதமாக செக்ஸ் பொம்மைகளை அல்ல, பொம்மைகளை தான் பயன்படுத்த இருப்பதாக நிறுவனம் உறுதியளித்ததாக விளக்கமளித்துள்ளது. உள்ளூர் நிறுவனம் ஒன்று மைதானத்தில் 25 பொம்மைகளை சப்ளை செய்துள்ளது. எப்.சி சியோல் கால்பந்து அணியின் சீருடை மற்றும் முகக்கவசம் அணிந்து அவை மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் போட்டி நடைபெற்ற போதே ரசிகர்கள், மனிதர்களை போன்று இருந்த பொம்மைகள் குறித்து சமூகவலைதளங்களில் சந்தேகம் எழுப்பியிருந்தனர். மாடல்களை வைத்து செக்ஸ் பொம்மை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் பேனரில் இருந்ததை குறிப்பிட்டுள்ளனர்.

இது போன்ற விளம்பரங்கள் போட்டியின் விதிமுறைகளை மீறுவதாக இருப்பதாக கே லீக் அதிகாரிகள், இதனை ஒழுங்கு கமிட்டிக்கு அனுப்பி வைத்தனர். இது நிரூபிக்கப்பட்டால், எப்.சி சியோல் அணிக்கு 4 ஆயிரம் டாலர்கள் அபராதம் அல்லது புள்ளிகள் குறைக்கப்படலாம். மேலும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து கொண்டிருந்த ஒரு கால்பந்து தொடரின் பராம்பரியத்தை சீர்குலைத்ததற்காக அணிக்கு தடை விதிக்கப்படலாமென கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
25-மே-202009:46:01 IST Report Abuse
Sampath Kumar உற்பத்தி பெருக்கம் என்பது இதான் போல
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
23-மே-202018:45:22 IST Report Abuse
Loganathaiyyan ஓ செக்ஸ் பொம்மை இதுக்கெல்லாம் உபயோகப்படுகிறது??பேஷ் பேஷ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X