தென்கொரியாவில் 2 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020
Share
Advertisement

சீயோல் : கொரோனா தாக்கம் காரணமாக தென் கொரியாவில் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது. ஆனால் ஜெர்மனி, சீனா மற்றும் தென்கொரியா போன்ற சில நாடுகள் நோய் பாதிப்புகளை வென்று இயல்புநிலைக்கு திரும்பியது. ஆனால் தற்போது மீண்டும் நோய் பரவ துவங்கிவிட்டது. இந்நிலையில் தென்கொரியாவில் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு மீண்டும் கொரோனா பரவ துவங்கியது.

இது தொடர்பாக அந்நாட்டின் ஊடகங்கள் கூறுகையில், தென் கொரியாவில் கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. பள்ளிக்குள் நுழையும் முன் மாணவர்களின் உடல் வெப்பநிலையை சோதித்த பிறகுதான் வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் பரிசோதனையில் 2 மாணவர்களுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. நோய் அச்சுறுத்தலால் மற்ற மாணவர்களும் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறு கூறியிருந்தது.


latest tamil news



தென்கொரியாவில் நோய் பரவலையடுத்து இணைய தளம் மூலமாக மாணவர்கள் கல்வி பயின்றனர். பின் சில பாதுகாப்பு விதிமுறைகளுடன் பள்ளிகள் திறக்க அரசு அனுமதியளித்தது. கொரோனா பரவலால் கடந்த இரு மாதங்களாக ஊரடங்கை அமல்படுத்தி இருந்த பல நாடுகள் தற்போது ஊரடங்கைத் தளர்த்தி வருகின்றன. எனினும் பல நாடுகளில் பள்ளிகள், கல்லூரிகள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை. தென்கொரியாவில் தற்போது 11,110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 263 பேர் தொற்று காரணமாக பலியாகினர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X