தொழிற்துறை வளர்ச்சிக்கு கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்க முடிவு| PM Narendra Modi chairs Union Cabinet meeting | Dinamalar

தொழிற்துறை வளர்ச்சிக்கு கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்க முடிவு

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (1)
Share

புதுடில்லி: தொழிற்துறை வளர்ச்சிக்கு கோடிக்கணக்கில் நிதியதவி வழங்க இன்று டில்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



இன்று டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது . இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமரின் 20 லட்சம் கோடி பொருளாதார நிதியுதவி திட்டங்களில் மேலும் சில துறைகளுக்கு சலுகை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.


latest tamil news



அதன்படி அமைப்புசாரா தொழிற்துறையின் கீழ் வரும் சிறிய உணவு பதப்படுத்தும் தொழில்களை மேம்படுத்த ரூ 10,000 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. அதே போல் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் , வீட்டுக்கடன் நிறுவனங்கள் ஆகியவற்றின் நிதி ஆதாரத்தை பெருக்குவதற்காக நிதி அமைச்சகத்தின் சிறப்பு நிதியுதவித் திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. கூட்டத்தில் அம்பான் புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X