பீகார்: கொரோனா முகாமில் பெண்களை வரவழைத்து நடனம்| Dance program allegedly held at quarantine centre in Bihar stirs controversy | Dinamalar

பீகார்: கொரோனா முகாமில் பெண்களை வரவழைத்து நடனம்

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (2)
Share

பாட்னா: பீகார் மாநிலத்தி்ல் கொரோனா முகாமிற்கு பெண்கள் வரவழைக்கப்பட்டு நடன நிகழ்ச்சி நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.latest tamil newsகொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். வெளியிடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் வைரஸ் தொற்று அறிகுறியுடன் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தனிமைப்படுத்தல் முகாமில் 14 நாட்கள் வைக்கப்படுகின்றனர். அதன்பின்னர் தேவைப்படும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதனிடையே பீகார் மாநிலம் சம்ஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள காராகா கிராமத்தில் மாநில அரசின் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் தங்கி உள்ளவர்கள் பொழுதுபோக்கிற்காக பெண்களைஅழைத்து வந்து நடன நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். இது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil newsஇதனையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,முகாமில் இது போன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது. கொரோனா முகாமில் பொழுது போக்கிற்காக தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன“ என மாவட்ட கூடுதல் கலெக்டர் அறிவித்து உள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X