தெலுங்கானாவில் ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா தொற்று

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. தெலுங்கானாவில் மாநில அரசின் நடவடிக்கைகளால் நோய் பாதிப்புகளின் விகிதம் முன்பை விட குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் நோய் பாதிப்பு இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி, மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1634 ஆக அதிகரித்தது.

நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 34 பேர் ஐதராபாத் நகர பகுதியிலும் (GHMC) , மற்ற 8 பேர் சிர்சில்லா, கரீம்நகர் மற்றும் யாதாத்ரி நகருக்கு வந்த வெளி மாநில தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது. நேற்று காந்தி மருத்துவமனையில் நோய் தொற்றில் இருந்து 9 பேர் குணமடைந்தனர். இதனால் தெலுங்கானாவில் நோய் குணமடைந்தவர்களின் மொத்தஎண்ணிக்கை 1,011 ஆக உயர்ந்தது. மேலும் கொரோனா பாதிப்புகளின் மீட்பு விகிதம் 63 சதவீதமாக உள்ளது.


latest tamil news



புதிதாக 4 பேர் ஐதராபாத் நகர பகுதியில் பலியாகினர். இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது. 585 பேர் காந்தி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதையொட்டி, 77 வெளி மாநில தொழிலாளர்கள் பரிசோதனை செய்யப்பட்டனர்.இவ்வாறு சுகாதாரதுறை தெரிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X