ரூ.1,800 கோடி நிலுவை :இந்திய செய்தி தாள் சங்கம் மனு

Updated : மே 22, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : 'மத்திய, மாநில அரசுகளின் விளம்பர நிறுவனங்கள், பத்திரிகைகள் மற்றும் காட்சி ஊடங்களுக்கு, 1,800 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளதாக, இந்திய செய்தித் தாள் சங்கம், செய்தி ஒளிபரப்பு சங்கம் ஆகியவை, உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளன. கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், ஏராளமான பத்திரிகை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ரூ.1,800 கோடி நிலுவை :இந்திய செய்தி தாள் சங்கம் மனு

புதுடில்லி : 'மத்திய, மாநில அரசுகளின் விளம்பர நிறுவனங்கள், பத்திரிகைகள் மற்றும் காட்சி ஊடங்களுக்கு, 1,800 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளதாக, இந்திய செய்தித் தாள் சங்கம், செய்தி ஒளிபரப்பு சங்கம் ஆகியவை, உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளன.

கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், ஏராளமான பத்திரிகை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பல நிறுவனங்களின் நிர்வாகம், ஊதிய குறைப்பு, கட்டாய விடுப்பு, பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதை எதிர்த்து, தேசிய பத்திரிகையாளர் கூட்டமைப்பு, டில்லி பத்திரிகையாளர் சங்கம், மும்பை பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.

இந்த மனு தொடர்பாக, உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியதை அடுத்து, இந்திய செய்தித் தாள் சங்கம், செய்தி ஒளிபரப்பு சங்கம் ஆகியவை, உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளன.

அவற்றின் விபரம்:


மத்திய அரசின், டி.வி.ஏ.பி., நிறுவனம், விளம்பரங்களை வெளியிட்ட வகையில், பல மாதங்களாக, அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு, 1,500-1,800 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன. இதில், செய்தித் தாள் நிறுவனங்களுக்கு மட்டும், 800-900 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. ஏற்கெனவே, அரசு விளம்பரங்கள், வெகுவாக குறைந்து விட்டன. இது, கொரோனாவால், மேலும் குறைந்து விட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் செலவைக் குறைக்க, விளம்பரங்களை நிறுத்த வேண்டும் என, அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கின்றன. விளம்பரங்கள்தான் பத்திரிகைகளின் பிரதான வருவாய். பத்திரிகைகளின் மொத்த செலவில், சிறிதளவு தான், விற்பனை வாயிலான வருவாய் மூலம் ஈடு செய்யப்படுகிறது.

ஊரடங்கால், நுகர் பொருட்கள், நிதி, வாகனம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டு ள்ளதால், விளம்பர வருவாய் வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக, பல பத்திரிகைகள், பக்கங்களை குறைத்து விட்டன. 'லைன்மேன்'கள் பத்திரிகைகளை விநியோகிக்க மறுப்பதால், பல பத்திரிகைகள், அச்சடிப்பை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பெருநகரங்களில், காலணிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு பத்திரிகைகளை விநியோகிக்க முடியவில்லை.

எங்கள் கூட்டமைப்பில் ஏராளமான செய்தி ஒளிபரப்பு நிறுவனங்கள் உறுப்பினராக உள்ளன. அவை அனைத்தும் தனியார் நிறுவனங்கள் என்பதால், அவற்றின் செயல்பாடுகளை எதிர்த்து 'ரிட்' மனு தாக்கல் செய்ய முடியாது.எனவே, செய்தித் தாள் சங்கம் மற்றும் செய்தி ஒளிபரப்பு நிறுவனங்ளுக்கு எதிராக, மூன்று பத்திரிகையாளர் சங்கங்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
21-மே-202020:13:24 IST Report Abuse
Ram These news papers simply confuse people, do not give any quality news, only half baked, unverified news they publish, they have no interest on the stability of the government and economy of the country. Therefore, there is no need to advertise in such media,
Rate this:
Cancel
Pats - Coimbatore,இந்தியா
21-மே-202011:20:51 IST Report Abuse
Pats குடுக்காதீங்க எஜமான். இவிங்க போடுற செய்தி எல்லாமே மக்கள் விரோதமாக இருக்கிறது. சின்ன பிரச்னையை ஊதி பெரிதாக்கி அரசு செயல்படவிடாமல் தடுப்பதே இவர்களின் வேலையாகிவிட்டது. அரசாங்கம் நஷ்டத்தில் தவித்தாலும் இவிங்களுக்கு காசு வரோனும். நிறைய களை எடுக்கவேண்டியிருக்கிறது. இறுதியில் உண்மையாக, நேர்மையாக, நாட்டு முன்னேற்றத்திற்காக செய்தி வெளியிடும் பத்திரிகைகள் நிலைத்து நிற்கும். கவலை வேண்டாம்.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
21-மே-202009:34:27 IST Report Abuse
Chandramoulli Without news paper every one survived these 2 months. Without any difficulty. They r getting lot of advertisement income. They know how to manipulate these income n converted into expenses. All news papers n news channels r not reliable . Another 6 months we don't want to see any news papers
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X