பொது செய்தி

இந்தியா

இயல்பு நிலைக்கு திரும்பியது தெலுங்கானா

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் கட்டுப்பாடுகளுடன் கடைகள், நிறுவனங்களை திறக்க மாநில அரசு அனுமதியளித்ததால் தளர்வுகளுடன் மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் நோய் பரவலை ெகட்டுப்படுத்தவும், ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் குறித்தும் முதல்வர் சந்திரசேகர ராவ் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதன்படி கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர மற்ற மாவட்டங்களில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் இயங்கவும், பேருந்துகளை இயக்கவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மாநிலத்தில் தற்போது பல கடைகளும் திறக்கப்பட்டது. பேருந்து சேவைகளும் பல நகரங்களில் இயக்கப்பட்டு தெலுங்கானா இயல்புநிலையை நோக்கி நகர்கிறது.

ஐதராபாத்தில் கட்டுப்பாடுகளுடன் 50 சதவீத கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஐதராபாத்தைத் தவிர்த்து, டி.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகள் காலை 6 மணி முதல் மாநிலம் முழுவதும் அதன் சேவைகளை இயக்க அனுமதிக்கப்படும். டாக்சிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மாநிலம் முழுவதும் சவாரி செய்ய அனுமதிக்கப்படும். மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்படும். மாநிலத்தில் இ-காமர்ஸ் நிறுவனத்திற்கும் அனுமதியளிக்கப்படும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் எந்தவொரு பொருளாதார நடவடிக்கையும் இருக்காது, அங்கு யாரும் நுழையவோ வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஐதராபாத் நகர பகுதிகளின் (GHMC ) வரம்பின் கீழ் உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கண்டிப்பாக பின்பற்றப்படும்.


latest tamil newsகடைகள் மற்றும் நிறுவனங்கள் திறக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் வரத்துவங்கினர். அனைத்து கடைகளிலும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு கடைகளிலும் வாடிக்கையாளர்கள், கடைக்குள் நுழையும் முன் கைகளை சுத்தப்படுத்த சானிட்டைசர்கள் வைக்கப்பட்டுள்ளன. சானிட்டை சர்களால் கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக பல இடங்களில் பிரத்யேகமாக செக்யூரிட்டிகள் பணியமர்த்தப்படுகின்றனர். அதை தொடர்ந்து, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளிகளை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை செயல்பாடுகளுடன் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இதனால் பல நகரங்களிலும் ஜவுளி கடைகள், எலக்ட்ரானிக்ஸ் போன்ற கடைகளில் வாடிக்கையாளர்களின் வரவால் திருவிழா நாட்கள் போன்று கூட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. நகரின் பல்வேறு இடங்களில் மூடப்பட்ட சாலைகளும் பாலங்களும் திறக்கப்பட்டதால் போக்குவரத்து சாதனங்கள் மூலம் மக்களும் இயல்பாக சென்று வந்தனர். அத்துடன் அடுத்த அறிவிப்பு வரும் வரை பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், மால்கள், வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.


டிஎஸ்ஆர்டிசி பஸ்கள் இயக்கம் :


ஊரடங்கால் நிறுத்தப்பட்ட டிஎஸ்ஆர்டிசி பஸ்கள் பல நாட்களுக்கு பின் பல்வேறு மாற்றங்களுடன் சுத்தமாக இயக்கப்படுகிறது. பஸ்களில் ஏறும் பயணிகள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். கைகைளை சுத்திமாக வைக்க வேண்டும், பஸ்களில் நிற்பதற்கு அனுமதி கிடையாது போன்ற விதிகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில் , 6000 பஸ்கள் வரை இயக்கப்படுகிறது. ஐதராபாத்தில், இன்னும் கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. பஸ்கள் வெவ்வேறு இடங்களில் இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டன. பெரும்பாலான பேருந்துகள் இடைவிடாதவை, சில மாவட்ட சேவைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட கட்டங்கள் இருக்கும். மாநில அரசின் மேலதிக உத்தரவுகள் வரும் வரை நாங்கள் மாநிலங்களுக்கு இடையேயான சேவைகளை இயக்க மாட்டோம். இவ்வாறு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
20-மே-202022:39:29 IST Report Abuse
Loganathan Kuttuva Government Bus fare is not increased.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X