இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 39.62 சதவீதமாக அதிகரிப்பு

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 39.62 சதவீதமாக அதிகரித்ததாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு

புதுடில்லி : இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 39.62 சதவீதமாக அதிகரித்ததாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமான மாநிலமாக மஹாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. அரசின் தொடர்ந்த நடவடிக்கையால் நோய் பாதிப்புகளில் இருந்து குணமடைந்து வருபரவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது : உலக அளவில் 1 லட்சத்திற்கு 62 என்ற விகிதத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் பாதிப்புகளை பொறுத்தவரை 1 லட்சத்திற்கு 7.9 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் 39.62 சதவீத நோயாளிகள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளில், 2.94 சதவீதத்தினர் செயற்கை சுவாச கருவிகளாலும், 3 சதவீதத்தினர் தீவிர சிகிச்சை பிரிவிலும் , 0.45 சதவீத நோயாளிகள் வென்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி விகிதங்களை பொறுத்தவரை, உலகளவில் 4.2 சதவீதமாகவும், இந்தியாவில் 0.2 சதவீதமாகவும்(லட்சத்திற்கு) உள்ளது.


latest tamil newsபாதிப்புகள் அதிகரித்து வரும்நிலையில், தொடர்ந்து, மீட்பு விகிதமும் உயர்ந்து கொண்டுதான் செல்கிறது. முதல் ஊரடங்குகளில் 7.1 சதவீதமாக இருந்த நோயாளிகளின் மீட்பு விகிதம் தற்போது 39.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நாட்டில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இன்று நிலவரப்படி, 1,06,750 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 3,303ஆகவும் உயர்ந்துள்ளது. இவ்வாறு கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
21-மே-202005:02:58 IST Report Abuse
தல புராணம் WHO reports largest single-day increase in corona virus cases. India surges: The country recorded more than 7,300 new cases in its biggest single-day spike during the pandemic.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X