பொது செய்தி

இந்தியா

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் இலவசம்

Updated : மே 22, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் இலவசம்

புதுடில்லி : ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள, எட்டு கோடி புலம் பெயர் தொழிலாளர்களுக்கு, மத்திய தொகுப்பிலிருந்து, 5 கிலோ உணவுப் பொருட்கள், இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்க, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

'ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும், ஒரு நபருக்கு, 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, 1 கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும். இதற்காக, 3,500 கோடி ரூபாய் செலவிடப்படும்' என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.ஊரடங்கு உத்தரவால், பல்வேறு துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இப்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தொழில் துறை வேகம் எடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.பிரதமர் நரேந்திர மோடி, கடந்த, 12ம் தேதி, 'டிவி' மூலம், நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, 'பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார திட்டங்கள் அறிவிக்கப்படும்' என்றார். அடுத்த ஐந்து நாட்களில், 20.97 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை, மத்திய நிதிஅமைச்சர், நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க, மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர், நரேந்திர மோடி தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் விபரம்:


ரூ.3 லட்சம் கோடிகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 3 லட்சம் கோடி ரூபாய்க்கு, குறைந்த வட்டியில், பிணையில்லா கடன் வழங்கப்படும் என, நிர்மலா சீதாராமன் அறிவித்த திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. வங்கி சாரா நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 30 ஆயிரம் கோடி ரூபாய், சிறப்பு பணப் புழக்க திட்டத்துக்கும், அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பங்கு சந்தையில், இந்த நிறுவனங்களின் கடன் பத்திரங்களை, மத்திய அரசு வாங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதியோர் திட்டம் நீட்டிப்புமுதியோருக்கான சமூக பாதுகாப்பு திட்டமான, 'பிரதம மந்திரி வய வந்தன யோஜனா' திட்டத்தை, 2023ம் ஆண்டு வரை நீட்டிக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம், எல்.ஐ.சி., எனப்படும் ஆயுள் காப்பீடு நிறுவனம் மூலம் அமல்படுத்தப்படுகிறது.


இலவச உணவுப் பொருள்நிலக்கரி சுரங்கத் துறையில், வர்த்தக ரீதியில் வருவாயை பகிர்ந்தளிக்க, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மீன்வளத்துறையின் வளர்ச்சிக்காக, 20 ஆயிரத்து, 50 கோடி ரூபாய் திட்டத்துக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 'பிரதம மந்திரி மத்ஸய செம்பட யோஜனா' என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில், 9,407 கோடி ரூபாயை, மத்திய அரசும், 4,880 கோடியை, மாநில அரசுகளும், 5,763 கோடி ரூபாயை பயனாளிகளும் ஏற்றுக் கொள்வர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள, எட்டு கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, மத்திய தொகுப்பிலிருந்து, 5 கிலோ உணவுப் பொருட்கள், இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்க, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும், ஒரு நபருக்கு, 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, 1 கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும். இதற்காக, 3,500 கோடி ரூபாய் செலவிடப்படும் என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


ரூ.10,000 கோடிஉள்ளூர் விவசாயப் பொருட்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், குறு உணவு உற்பத்தி நிறுவனங்களை உருவாக்க, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், நாடு முழுதும், இரண்டு லட்சம் குறு உணவு உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், வேலைவாய்ப்புக்கான குடியேற்ற சட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
21-மே-202020:15:53 IST Report Abuse
Ram Central should never give cash, because the local politicians will loot a part of it. All parties opposing MODI for one simple reason that is transparency and progressive
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
21-மே-202007:57:15 IST Report Abuse
VENKATASUBRAMANIAN No. We need money no development or food grains which is demanded by oppositions like dmk, admk, vck, congis, etc. Because their hands are tightned for not making money thru the schemes. So they are shouting against govt. And Priyanka is making drama in UP.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
21-மே-202005:54:10 IST Report Abuse
blocked user நிலைமை இவ்வளவு சிக்கலாக இருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கோமாளித்தனம் செய்யவேண்டாம் என்றூ சொன்ன எம் எல் ஏ வை பதவி நீக்கம் செய்திருக்கிறது. தொண்டன் தவறு செய்தால் தலைமை தட்டிக்கேட்க வேண்டும். அங்கு தலைமையே தவறை மட்டுமே தொடர்ந்து செய்து வருகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X