கொரோனா தாக்கத்தால் குறைகிறது காகித தேவை : ஆய்வில் தகவல்| Paper demand to shrink by 10-15 pc in FY21: Crisil Research | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனா தாக்கத்தால் குறைகிறது காகித தேவை : ஆய்வில் தகவல்

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (2)
Share

புதுடில்லி: கொரோனா தாக்கம் காரணமாக நாட்டின் காகித தேவை10 முதல் 15 சதவீதம் வரையில் குறையக்கூடும் என கிரிசில் ரிசர்ச் தெரிவித்து உள்ளது.



latest tamil news



இது குறித்து கிரிசில் ரிசர்ச் தெரிவித்து இருப்பதாவது: நாட்டின் காகித தேவையை பூர்த்தி செய்யும் தொழிற்சாலைகளில் 80 சதவீதம் வரையில் குறிப்பிட்ட ஆறு மாநிலங்களில் மட்டுமே உள்ளன. இவை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியை கொண்டுள்ளன.

தற்போது நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இது காகித தொழிலுக்கு பலத்த அடி கொடுத்து உள்ளது. பள்ளிகள்,கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் அவர்களுக்கான தேவை குறைந்து விட்டது. அதே நேரத்தில் பெரும்பாலான அலுவலகங்கள் எழுதுதல் மற்றும் அச்சிடுவதற்கான காகிதத்தின் தேவையை குறைத்து உள்ளன.


latest tamil news



கடந்த ஆண்டை காட்டிலும் இந்த நிதியாண்டிற்கான காகிதத் தேவை 10-15 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X