சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: நெசவாளர் நல வாரியத்தில், உறுப்பினர் ஆகாத நெசவாளர்களுக்கும், 2,000 ரூபாய், நிவாரண தொகை வழங்கப்படும். இந்த தொகையை, கைத்தறித் துறை இயக்குனர் வழியே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, தகுதியான நெசவாளர்கள், விண்ணப்பித்து, பயன் பெறலாம்.


'டவுட்' தனபாலு: தினமும், இதுபோன்ற உத்தரவுகளை, வெளியிட்டு வருகிறீர்கள். இதனால், பல தரப்பினர் பலன் பெறுகின்றனர் என்பது நல்லதே. அதே நேரத்தில், இதுபோன்ற உத்தரவுகளை, 'பிரஸ் மீட்' வைத்து அல்லது பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு அறிவித்தால், அரசுக்கும், முதல்வருக்கும் நல்ல விளம்பரம் கிடைக்குமே; அதை முதல்வர் தவற விடுகிறோரோ என்ற, 'டவுட்' சாமானியர்களுக்கும் வருதே!


பத்திரிகை செய்தி:
டாஸ்மாக் கடைகளில், ௧ ரூபாய் கூடுதல் விலை வைத்து, மது பானங்கள் விற்றாலும், விற்பனையாளருக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் தவறு செய்தால், ஊழியர், மேற்பார்வையாளர் இட மாற்றம் செய்யப்படுவர் என்பன போன்ற கடும் உத்தரவை, டாஸ்மாக் நிர்வாகம் விதித்துள்ளது.

'டவுட்' தனபாலு: வழக்கமாக, ஒரு பாட்டிலுக்கு, 30 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், மது பிரியர்கள் குடிக்கும் அளவை குறைத்து, டாஸ்மாக் விற்பனை மந்தமாகி விடக் கூடாது என்பதற்காகத் தான், இந்த அதிரடி உத்தரவை, டாஸ்மாக் நிர்வாகம் பிறப்பித்துள்ளதோ என்ற, 'டவுட்' மக்களுக்கு ஏற்படுகிறது!



தி.மு.க., இளைஞரணிச் செயலர் உதயநிதி:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை, ஜூன், 15க்கு அரசு ஒத்தி வைத்துள்ளது; அதற்கு நன்றி. சென்னையில், கொரோனா நோய் அதிகரித்துள்ளது. எனவே, நோய் பரவல் குறைந்து, சகஜ நிலை திரும்பும் வரை, தேர்வை மேலும் ஒத்திவைக்கும்படி, அமைச்சர் செங்கோட்டையனிடம், கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
'டவுட்' தனபாலு: வழக்கமாக இதுபோன்ற கல்வித்துறை தொடர்பான விஷயங்களுக்கு, உங்கள் ஆட்சியின் கல்வித்துறை அமைச்சர் தானே, கோரிக்கை விடுப்பார்; அமைச்சரை சந்திப்பார். இப்போது நீங்களே களத்தில் நேரடியாக இறங்கி விட்டீர்களா... இதனால், கட்சியிலும், வெளியிலும் பிரபலமாக விரும்புகிறீர்களோ என்ற, 'டவுட்' வருகிறதே, சரி தானா?

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaaaa - Bbbbbb,இந்தியா
21-மே-202008:18:41 IST Report Abuse
Aaaaa உங்களுக்கு வரும் டவுட் எல்லாம் மக்களுக்கு வரவேண்டும் என்றுள்ளதா என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X