சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மே 20, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'அப்போ, தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்திருக்க வேண்டுமல்லவா; நாட்டிலேயே, அதிக தொற்றுடைய, இரண்டாவது மாநிலமாக அல்லவா தொடர்ந்து விளங்குகிறது...' என, எதிர்கேள்வி கேட்கத் துாண்டும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேட்டி: கொரோனா பரவாமல் தடுப்பது, மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, தரமான சிகிச்சையளித்து அதிகமானவர்களை குணப்படுத்துவது, இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில், தமிழகம், நாட்டிலேயே, முன்மாதிரியாக உள்ளது.



'புலம் பெயர்வோரின் இப்போதைய குறி, சொந்த ஊர்களுக்கு செல்வதே; அதற்கு ஏற்பாடு செய்வது தான், இப்போதைக்கு சரியாக இருக்கும்...' என, பதில் சொல்லத் தோன்றும் வகையில், காந்தி பேரவை தலைவர், குமரிஅனந்தன் அறிக்கை:
கொடிய கொரோனாவால் வேலை இழந்து, புலம் பெயர்வோர், கண்ணீர் வடிக்கின்றனர். அவர்களை உடனே, நதிநீர் இணைப்பு பணியில் ஈடுபடுத்தி, நதிநீர் இணைப்புக்கு வழி காண வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜிவின் கனவும் நிறைவேறும்; ஆத்மா சாந்தியடையும்.



'ஜெ., வழங்கியதை கூறினால், இப்போதைய ஆட்சியர் பரிசீலிப்பர் என்பது, உங்கள் எண்ணமோ...' என, கேள்வி கேட்கத் தோன்றும் வகையில், சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கச் செயலர், பாலு பேட்டி:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, விசைத்தறியாளர்களுக்கு, முதல், 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கியதுடன், அதற்கு மேலான மின் கட்டணத்தில், 1 யூனிட்டுக்கு, 50 காசு குறைத்து, சலுகை வழங்கினார். இச்சலுகைகளை தொடர வேண்டும்.

'ஆட்டோ, டாக்சிகள் ஓடுவதற்கு, இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்...' என, ஊரடங்கை நினைவூட்டும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: கொரோனா ஊரடங்கில், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்க, தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். ஆட்டோ டிரைவர்கள், இதனால் நிம்மதி பெருமூச்சு விட முடியும்.
'கோவிலை நம்பி இருப்போரை, பக்தர்களும், அரசும் தான் காப்பாற்ற வேண்டும்...' என, சொல்லத் துாண்டும் வகையில், பா.ஜ., தேசியச்செயலர், எச்.ராஜா அறிக்கை: தொடர்ந்து, ஹிந்து அறநிலையத் துறையின் கீழ் இருந்து வரும், 44 ஆயிரம் கோவில்கள், பக்தர்கள் வழிபாடு இன்றி, தடை செய்யப்பட்டுள்ளதால் பாதிப்படைந்திருக்கும் அர்ச்சகர்கள், பூஜாரி, ஓதுவார்கள், நாதஸ்வரக் கலைஞர்கள் போன்றோருக்கு, விசேஷ நிதி தொகுப்பை, தமிழக அரசு அளிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X