சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ஆயுதப்படைக்கு மாற்றியும் அசராத வசூல் ஏட்டு!

Added : மே 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 ஆயுதப்படைக்கு மாற்றியும் அசராத வசூல் ஏட்டு!

ஆயுதப்படைக்கு மாற்றியும் அசராத வசூல் ஏட்டு!

''யார் செஞ்சது பெருசுன்னு, குழாயடி சண்டை போடுறாங்க பா...'' என, குப்பண்ணா வீட்டு தாழ்வாரத்தில், கச்சேரியை ஆரம்பித்தார்,
அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''ஒருங்கிணைவோம் வா திட்டம் மூலமா, தமிழகம் முழுக்க, 15 லட்சம் பேரிடம் இருந்து, உதவிகள் கேட்டு அழைப்புகள் வந்திருக்கு... 17 லட்சம் பேருக்கு, உணவு வழங்கியிருக்கோம்னு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சமீபத்துல பெருமிதமா அறிக்கை
விட்டாரு பா...''இதுக்கு, சமூக வலைதளங்கள்ல ஆளுங்கட்சியினர் பதிலடி தந்துட்டு இருக்காங்க...
''அதாவது, 'உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணியின் சகோதரர் அன்பரசன் நடத்துற, 'நல்லறம்' அறக்கட்டளை சார்புல, கோவை மாவட்டத்துல மட்டும், தினமும், 1.50 லட்சம் பேருக்கு மூணு வேளை உணவுன்னு, 20 லட்சம் பேருக்கு சாப்பாடு போட்டிருக்கோம்...
அதனால, 17 லட்சம் பெருசா, 20 லட்சம் பெருசா'ன்னு கேட்டிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''வலது கை குடுக்கறது, இடது கைக்கு
தெரியப்டாதுன்னு
சொல்லுவா... இவான்னா, தம்பட்டம்னா அடிக்கறா... என்னத்தைச் சொல்றது போங்கோ...'' என, அலுத்துக் கொண்டார், குப்பண்ணா.
உடனே, ''கழிவு நீரை எடுத்துட்டு போய், ஏரியில கலந்துடுதாரு வே...'' என, அதிர்ச்சி தகவலை ஆரம்பித்தார், அண்ணாச்சி.
''எங்கங்க இந்த அக்கிரமம்...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னையை ஒட்டியிருக்கிற ஆவடி மாநகராட்சியில, குடியிருப்புகள்ல கழிவு நீரை அகற்றும் கான்ட்ராக்ட் எடுத்தவரை தான் சொல்லுதேன்...
''இவர், மூணு லாரிகள்ல தினமும் கழிவு நீரை எடுத்துட்டு போய், திருமுல்லைவாயில்ல இருக்கிற, அராபத் ஏரியில கலந்துடுதாரு வே...''இதனால, 34 ஏக்கர்ல இருக்கிற அந்த ஏரி பாழா போயிட்டு இருக்கு... இது, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிஞ்சும், எதையும் கண்டுக்காம, கமுக்கமா இருக்காவ வே...''
என்றார், அண்ணாச்சி.''ஒலித்த போனை எடுத்த குப்பண்ணா, ''சரவணன்... அரை மணி நேரத்துல, நானே கூப்பிடறேன்...'' எனக் கூறி வைத்தவர், ''டிரான்ஸ்பர்ல போனாலும், பழைய இடத்துல வசூல் வேட்டையை நிறுத்தலை ஓய்...'' என, கடைசி தகவலுக்கு
வந்தார்.''யாருவே அவர்...'' என விசாரித்தார், அண்ணாச்சி.
''திருச்சி, மணப்பாறை பக்கத்துல தனிப்பிரிவு ஏட்டா இருந்தவர், பல வருஷங்களா அங்கயே வேலை பார்த்தார்... லாட்டரி விற்பனை, மணல் கடத்தல், சூதாட்ட கிளப், சட்டவிரோத பார்னு எல்லாத்துலயும், இவருக்கு பங்கு வந்துடும் ஓய்...
''பல வருஷங்களா இதுலயே ஊறிப் போனவர், கோடிக்கணக்குல சம்பாதிச்சுட்டார்... இவரைப் பத்தி, டி.ஐ.ஜி., - எஸ்.பி.,க்கு புகார்கள் போக, இவரை ஆயுதப்படைக்கு துாக்கி அடிச்சுட்டா ஓய்...
''ஆனாலும், 'இன்னும் சில நாட்கள்ல, பழைய இடத்துக்கோ அல்லது பக்கத்து ஊருக்கோ வந்துடுவேன்... டிரான்ஸ்பரை கேன்சல் பண்ண, பார்க்க வேண்டியவாளை பார்த்துட்டேன்... அதனால, என் மாமூலை நிறுத்தாம குடுத்துடுங்கோ'ன்னு மிரட்டி வசூல் பண்ணிண்டு இருக்கார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
அரட்டை முடிந்து தெருவில் இறங்க, எதிரில் வந்தவரை நிறுத்திய அந்தோணிசாமி, ''ஆரோக்கிய பெட்ரிக், கொஞ்ச நாளா எங்க போயிருந்தீங்க...'' என பேச, மற்றவர்கள் இடத்தை காலி
செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A R J U N - sennai ,இந்தியா
21-மே-202013:24:40 IST Report Abuse
A R J U N ...ஆரோக்கிய பெட்ரிக், ,சரவணன் போண்டோரை எப்படி கையாளுவது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X