இதே நாளில் அன்று

Added : மே 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
  இதே நாளில் அன்று

மே, 21, 1991

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 1944- ஆக., 20ம் தேதி, ஜவஹர்லால் நேரு மகளான இந்திராவிற்கு, முதல் மகனாக பிறந்தவர், ராஜிவ். இங்கிலாந்தில் உள்ள, கேம்பிரிட்ஜ் மற்றும் இம்பீரியல் கல்லுாரியில் பயின்றார். பைலட் பயிற்சி பெற்று, 'இந்தியன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தில், விமான ஓட்டுனராக பணிபுரிந்தார். தன்னுடன் படித்த சோனியாவை, திருமணம் செய்து கொண்டார்.
கடந்த, 1984 அக்., 31ல், பிரதமர் இந்திரா, சுட்டுக் கொல்லப்பட்டபின், காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். அதன்பின் நடந்த, லோக்சபா தேர்தலில், பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, நாட்டின் ஏழாவது பிரதமராக பதவியேற்றார். நம் நாட்டின் இளம்வயது பிரதமர் என்ற பெருமைப் பெற்றார்.
கடந்த, 1991 மே, 21ம் தேதி, ஸ்ரீபெரும்புதுாரில் நடந்த, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், தடை செய்யப்பட்ட, விடுதலை புலிகள் இயக்கத்தினரால், படுகொலை செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காலமான தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KUMAR. S - GUJARAT ,இந்தியா
21-மே-202014:19:21 IST Report Abuse
KUMAR. S mariyaathaikkuriya munnal prathamarukku engalathu anjali.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X