பொது செய்தி

தமிழ்நாடு

'ஓவர் டிராப்ட் திட்டம்' வங்கியில் அறிமுகம்

Added : மே 20, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தனலட்சுமி வங்கி கிளையில், 'தங்க நகை ஓவர் டிராப்ட் திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, காஞ்சிபுரம் தனலட்சுமி வங்கி கிளை மேலாளர் சொக்கலிங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தனலட்சுமி வங்கியில், 'தங்க நகை ஓவர் டிராப்ட் திட்டம்' எனும், கூடுதல் கடன் பெறும் வசதி வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இத்திட்டத்தின் மூலம், ஒரு வாடிக்கையாளர், 10 லட்சம் ரூபாய் வரை, குறைந்த வட்டியில், எளிதாக கடன் பெற முடியும். பெறப்பட்ட கடனுக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படும்.

இதன் மூலமாக, தேவையான நகையை எடுத்துக் கொள்ளவோ, கூடுதல் நகையை சேர்க்கவோ இயலும். தேவைப்படும் பணத்தை, ஏ.டி.எம்., மூலமாகவும் வாடிக்கையாளர்கள் எடுத்துக் கொள்ளலாம். வணிகர்களுக்கு இந்த திட்டம், பயனுள்ளதாக இருக்கும். கூடுதல் விபரங்களுக்கு, காஞ்சிபுரத்தில் உள்ள தனலட்சுமி வங்கி கிளையை அணுகலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X