பொது செய்தி

தமிழ்நாடு

கருங்குழியில் கிணறு பேரூராட்சி நடவடிக்கை

Added : மே 20, 2020
Share
Advertisement

மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியம், கருங்குழி பேரூராட்சி யில், 15 வார்டுகள் உள்ளன. இவற்றுக்கு, தினமும், 10 லட்சம் லிட்டர் குடிநீர் தேவையாக உள்ளது.

கோடைக்காலத்தில் தட்டுப்பாடு இல்லாமல் சீராக குடிநீர் வினியோகிக்க, கூடுதல் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் கூறியதாவது:கடந்த ஆண்டில், வறட்சி நிவாரண பணியாக, இரண்டு திறந்தவெளி கிணறுகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன. ஏற்கனவே, 17 கிணறுகள் அமைக்கப்பட்டு, தினமும், குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இதர தேவைக்கு, பேரூராட்சி பகுதிகளில், 80 சிறு மின் விசை பம்புகள் முறையாக பராமரிக்கப்பட்டு, தொடர்ந்து குடிநீர் வழங்கப்படுகிறது.தற்போது, கூடுதல் குடிநீர் ஆதாரத்திற்காக, இரண்டாவது வார்டில், திறந்தவெளி கிணறு ஒன்று அமைக்க, அரசிடம் மானியம் கோரப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X