ஓமனில் மேலும் 372 பேருக்கு கொரோனா

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020
Share
Advertisement

மஸ்கட் : கொரோனா தாக்கம் அதிகரித்து ஓமனில் புதிதாக 372 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது ஊரடங்கு விதிகளில் தளர்வும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓமனில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து, ஒரே நாளில் மேலும் 372 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 6,043 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 152 பேர் ஓமன் நாட்டை சேர்ந்தவர்கள். மற்ற 22வ பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.


latest tamil news



மேலும் வெளிநாட்டை சேர்ந்த பயணி ஒருவர் நோய்க்கு பலியானதை தொடர்ந்து, மொத்த பலிகளின் எண்ணிக்கை 27 ஆக உள்ளது. புதிதாக நோய் தொற்றில் இருந்து 87 பேர் குணமடைந்தனர். இதனால் நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1661 ஆக உள்ளது. தொடர்ந்து, ஓமனில் நோய் பரவுதலை தடுக்கும் வகையில் இந்த வாரம் முதல் சிலகட்டுப்பாடுகளை ஏற்படுத்தியதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X