தமிழ்நாடு

செங்கை மருத்துவமனையில் 8 மணி நேரத்தில், 'ரிசல்ட்'

Added : மே 20, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு : ''செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், எட்டு மணி நேரத்தில், கொரோனா பரிசோதனை முடிவு தெரிவிக்கப்படுகிறது,'' என, மருத்துவமனை முதல்வர் சாந்திமலர் தெரிவித்தார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.இம்மருத்துவமனையில், மே, 1ம் தேதி, கொரோனா தொற்று கண்டறியும், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மையம் திறக்கப்பட்டது. இங்கு, நேற்று வரை, 2,164 பேருக்கு, பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனை முதல்வர் சாந்திமலர் கூறியதாவது:அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பி.சி.ஆர்., பரிசோதனை மையம் துவங்கியதிலிருந்து, 2,164 பேருக்கு, பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.ஒருவருக்கு, கொரோனா தொற்று உள்ளதா என்பதை, எட்டு மணி நேரத்தில் கண்டறிய முடிகிறது. இதனால், நோயாளிகளுக்கு, விரைந்து சிகிச்சை அளிக்க முடிகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

இம்மருத்துவமனை, கொரோனா சிறப்பு வார்டுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உணவு வழங்குவதற்கு, செங்கல்பட்டு அடுத்த, கோகுலபுரம் பகுதியைச் சேர்ந்த, தன்னார்வலர்கள், 1 லட்சம் ரூபாய் மதிப்புஉள்ள, அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களை, மருத்துவமனை முதல்வர் சாந்திமலரிடம், நேற்று வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X