சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகராட்சி ஊழியர் விபத்தில் பலி

Added : மே 20, 2020
Share
Advertisement
ஒரகடம் : ஒரகடம் அருகே நடந்த சாலை விபத்தில், காஞ்சிபுரம் நகராட்சி வருவாய் அலுவலர் பலியானார்.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையேச் சேர்ந்தவர் தமிழ்செல்வி, 55; காஞ்சிபுரம் நகராட்சியில், வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தார்.அதே அலுவலகத்தில் பணியாற்றிவரும் சுப்புலட்சுமி என்பவருடன், 'ஆக்டிவா ஸ்கூட்டர்' இருசக்கர வாகனத்தில், நேற்று முன்தினம் காலை, தாம்பரத்தில் இருந்து

ஒரகடம் : ஒரகடம் அருகே நடந்த சாலை விபத்தில், காஞ்சிபுரம் நகராட்சி வருவாய் அலுவலர் பலியானார்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையேச் சேர்ந்தவர் தமிழ்செல்வி, 55; காஞ்சிபுரம் நகராட்சியில், வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தார்.அதே அலுவலகத்தில் பணியாற்றிவரும் சுப்புலட்சுமி என்பவருடன், 'ஆக்டிவா ஸ்கூட்டர்' இருசக்கர வாகனத்தில், நேற்று முன்தினம் காலை, தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்றார்.வண்டலுார்- - வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அருகே பண்ரூட்டி பகுதியை கடந்தபோது, நிலை தடுமாறிய ஸ்கூட்டரில் இருந்து, இருவரும் விழுந்தனர்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த தமிழ்செல்வி, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பலியானார். சுப்புலட்சுமி, லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். ஒரகடம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X