அரசியல் செய்தி

தமிழ்நாடு

பத்திரிகை துறையை பாதுகாக்க கட்சி தலைவர்கள் வேண்டுகோள்

Updated : மே 22, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (11+ 33)
Share
Advertisement
newspaper, coronavirus crisis, tamil nadu news, mk stalin, vaiko, tn news, dinamalar news, bjp

சென்னை,: 'அச்சு ஊடகங்களின் நெருக்கடியை களைய பா.ம.க. துணைநிற்கும் என இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.


அவரது அறிக்கை:

கொரோனா காரணமாக அச்சு ஊடகங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருவது குறித்து 'தினமலர்' இல.ஆதிமூலம், 'ஹிந்து' ராம், 'தினகரன்' ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் என்னை சந்தித்து பேசினர். நியூஸ் பிரின்ட் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும், மத்திய மாநில அரசுகளின் விளம்பரங்களுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், விளம்பரக் கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்த வேண்டும்' என்பது அவர்களின் முதன்மையான கோரிக்கை. அவர்கள் வழங்கிய கடிதத்தில் 'தினத்தந்தி' பாலசுப்பிரமணிய ஆதித்தன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மனோஜ் குமார் சொந்தாலியா ஆகியோரும் கையெழுத்திட்டிருந்தனர்.

எங்கள் கட்சி நிறுவனர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து விளக்கினேன். அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு வரும் அனைத்து நெருக்கடிகளையும் களைவதற்கு பா.ம.க., நடவடிக்கை எடுக்கும்' என அவர் உறுதியளித்தார்.செய்தித்தாள் தயாரிப்பு செலவிற்கு அதிக விளம்பரங்கள் வந்தால் மட்டுமே சமாளிக்க முடியும். எனவே அதிக விளம்பரங்கள், அதிக விளம்பரக் கட்டணம் மூலம் அரசு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


மார்க்சிஸ்ட் கம்யூ., அறிக்கை:மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் ஆகியோரையும் பத்திரிகையாளர்கள் சந்தித்து கோரிக்கைகளை விளக்கினர். அகில இந்திய பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி மற்றும் எம்.பி.க்கள் மூலம் பிரதமர் மோடி கவனத்திற்கு எடுத்து செல்வதாக அவர்கள் உறுதியளித்தனர்.


புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி:
கொரோனா ஊரடங்கால் பத்திரிகைகள் நலிந்துள்ளன. பத்திரிகையாளர்கள் கோரிக்கைகளை பிரதமர் பரிவோடு கவனித்து உதவி செய்ய வேண்டும்.


தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா:அச்சு ஊடகங்களை காக்க தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் சார்பில் ஓராண்டுக்கு இலவசமாக காகிதங்களை வழங்க வேண்டும். அதிக விளம்பரங்களை வழங்குவதோடு விளம்பர பாக்கியையும் அரசு உடனே வழங்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (11+ 33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.Elumalai - Chennai,இந்தியா
21-மே-202022:28:47 IST Report Abuse
C.Elumalai தினமணி,தினமலர் இதழ்களை தவிர மற்ற பத்திரிகைகள் எல்லாம் கட்சிகளின், கைபாவைகளே.இவர்கள் அரசிடம் கோரிக்கை வைப்பது தவறானது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
21-மே-202021:13:58 IST Report Abuse
RajanRajan . வாங்க வாங்க
Rate this:
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
21-மே-202016:38:50 IST Report Abuse
V Gopalan Only such of those print media should be given protection and not for the communist based and go on creating the troubles to Govt.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X