கேரளாவில் கட்டண உயர்வுடன் துவங்கிய பஸ் போக்குவரத்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளாவில் கட்டண உயர்வுடன் துவங்கிய பஸ் போக்குவரத்து

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (6)
Share

திருவனந்தபுரம்; கேரளாவில் ஊரடங்கின் காரணமாக முடங்கிய பஸ் போக்கு வரத்து கட்டண உயர்வுடன் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.



latest tamil news



கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நான்கு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. நான்காம் கட்ட ஊரடங்கின் போது அறிவிக்கப்பட்ட தளர்வையடுத்து சில மாநிலங்களில் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் 56 நாட்களுக்கு பிறகு மீண்டும் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பஸ்களில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. நகரப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் பயணிகள் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் பயணம் செய்தனர். இருப்பினும் ஒரு சில இடங்களில் சமூக விலகலை கடைப்பிடிக்க முடியாத வகையில் பயணிகள் பயணித்தனர்.


latest tamil news



கட்டணம் உயர்த்தப்பட்டு குறைந்த பட்ச கட்டணம் ரூ 12 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். பஸ்ஸின் பின்பக்கம் ஏறி முன்பக்கம் இறங்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் என்ற அரசு அறிவித்த கட்டுப்பாடுகளுடன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X