பொது செய்தி

தமிழ்நாடு

ஆறுவழி சாலை: விரிவு பணி துவக்கம்

Added : மே 20, 2020
Share
Advertisement

காரப்பேட்டை : ஊரடங்கால் நிறுத்தப்பட்ட, ஸ்ரீபெரும்புதுார் - காரப்பேட்டை வரையிலான, ஆறுவழி தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை - பெங்களூரு வரை, நான்குவழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களின் கூடுதல் பயன்பாட்டிற்கு, 654.26 கோடி ரூபாய் செலவில், நான்கு வழி சாலை, ஆறு வழியாக விரிவுபடுத்தும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக, சாலை விரிவுபடுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டது. தற்போது, கட்டுமான பணிக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, நிறுத்தப்பட்ட ஆறு வழி சாலை பணி, காஞ்சிபுரம் அடுத்த, காரப்பேட்டை பகுதியில், தீவிரமாக நடந்து வருகிறது.விரிவுபடுத்தப்படும் தரைப்பாலங்களின் அருகே, மண் கொட்டி, சாலை விரிவுபடுத்தும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X