குடி போதையில் தகராறு வாலிபர் குத்தி கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடி போதையில் தகராறு வாலிபர் குத்தி கொலை

Added : மே 20, 2020
Share

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே, குடி போதையில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துாரைச் சேர்ந்தவர் அஜித்குமார், 23; ஸ்ரீபெரும்புதுாரில், தனியார் நிறுவன ஊழியர். கஞ்சா வியாபாரியாகவும் இருந்த இவரிடம், நேற்று முன்தினம் இரவு, அவரது நண்பர்கள், காக்கா சுரேஷ், 29, சூர்யா, 23, வெங்கடேசன், 24, மற்றும் ஸ்ரீதர், 23, கஞ்சா வாங்க வந்துள்ளனர்.அப்போது, அனைவரும் ஒன்றாக சேர்ந்து, ஏனாத்துார் பகுதியில் மது அருந்தியுள்ளனர்; கஞ்சாவும் புகைத்துள்ளனர். இதில், போதை அதிகமாகி, நண்பர்களுக்கும், அஜித்குமாருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த காக்கா சுரேஷ், இடுப்பில் வைத்திருந்த கத்தியால், அஜித்குமாரை, சரமாரியாக குத்தினார். மற்றவர்கள், கொலை செய்ய உடந்தையாக இருந்துள்ளனர்.கொலை செய்யப்பட்டு சடலம் கிடப்பதாக, தகவலறிந்து வந்த காஞ்சி தாலுகா போலீசார், சடலத்தை கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில், ஸ்ரீதர், வெங்கடேசன், சூர்யா, காக்கா சுரேஷ் ஆகியோருடன் அஜித்குமார் மது அருந்தியதும், வாய் தகராறில் கொலை நடந்ததும் தெரிந்தது. இதையடுத்து, மேற்கண்ட நான்கு பேரையும், போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'சில ஆண்டுகளுக்கு முன், தே.மு.தி.க., பிரமுகர் சரவணன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் காக்கா சுரேஷ். பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த கொலையிலும், காக்கா சுரேஷ் தான் முதல் குற்றவாளி' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X