பொன்னேரி : நடவுப் பணிகளுக்கு, ஆட்கள் பற்றாக்குறையை தவிர்க்க, விவசாயி ஒருவர், 'டிரம் சீடர்' கருவி மூலம், நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டு உள்ளார்.
மீஞ்சூர் ஒன்றியத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு, நாற்றாங்கால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், நடவுப் பணிகளுக்கு, ஆந்திர கூலியாட்கள் வராததால், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல், சிரமப்படுகின்றனர்.இந்நிலையில், பொன்னேரி அடுத்த, இலுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார், 42, என்பவர், 'டிரம் சீடர்' கருவி மூலம், நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு உள்ளார்.
ஒரே ஒரு பணியாளரை வைத்து, ஒரு மணி நேரத்தில், 1 ஏக்கர் நிலத்தில் நெல் விதைப்பு செய்ய முடிகிறது. நாற்றாங்கால் முறைக்கு, 30 கிலோ விதை நெல் தேவைப்படும் நிலையில், இதற்கு, 10 கிலோ போதுமானது உள்ளது.நேரடி நெல் விதைப்பு பணிகளை, மாவட்ட வேளாண் இணை இயக்குனர், மீஞ்சூர் வட்டார உதவி இயக்குனர் மற்றும் வேளாண் அலுவலர்கள் பார்வையிட்டு, விவசாயியை பாராட்டி, அவருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.மற்ற விவசாயிகளும், இந்த முறையை பின்பற்றிட வேண்டும் எனவும், அறிவுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE