விடுபட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விடுபட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

Added : மே 20, 2020
Share

பழவேற்காடு : விடுபட்ட மீனவர்களுக்கு, மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.

கடந்த மாதம், 15 முதல், மீன்பிடி தடைகாலம் நடைபெற்று வருவதால், பழவேற்காடு பகுதி மீனவர்கள், மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் உள்ளனர். மீன்பிடி தடைகாலத்தில், மீனவர் நலவாரியம் மூலம், ஒரு உறுப்பினருக்கு, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது.தற்போது, வங்கிகள் மூலம், பழவேற்காடு பகுதியை சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. 15 நாட்களுக்கு முன், மீனவர்களின் வங்கி கணக்கில் பணம் வந்தடைந்து, அதை கொண்டு மீனவர்கள் குடும்ப செலவினங்களை பார்த்து வருகின்றனர்.

அதே சமயம், பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு, இந்த நிவாரணம் கிடைக்கவில்லை. பஸ் சேவை இல்லாததால், மீன்வளத் துறை அலுவலத்திற்கு சென்று முறையிட முடியாமல், தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து உள்ளனர்.விடுபட்டவர்களுக்கு ஓரிரு நாளில் வந்து விடும்' என, மீன்வளத் துறை, 15 நாட்களாக தெரிவித்து வருவதாகவும், இதுவரை நிவாரணம் கிடைக்காமல் தவிப்பதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக, மீனவளத் துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X