25ம் தேதி முதல் உள்ளூர் விமானப் போக்குவரத்து துவக்கம்

Updated : மே 21, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Domestic flights, Civil Aviation Minister, Hardeep Singh Puri, 25ம் தேதி உள்ளூர் விமானப் போக்குவரத்து துவக்கம்...

புதுடில்லி : 'ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை, வரும், 25ம் தேதி முதல் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும்' என, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர், ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, மார்ச், 25 முதல், நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது, உள்நாட்டு விமான சேவையும் நிறுத்தப்பட்டது.


சலுகைகள்அதன்பின், மருத்துவ அவசர உதவிக்காக, வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை அழைத்து வர மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.நான்காம் கட்ட ஊரடங்கை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபோது, இம்மாதம், 31ம் தேதி வரை, உள்நாட்டு விமான சேவையை நிறுத்தி வைப்பதாக, விமானப் போக்கு வரத்து அமைச்சகம்
அறிவித்திருந்தது.தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்திலும் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, நாடு முழுதும், 'ஏசி' வசதி இல்லாத பயணியர் ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வே அறிவித்துள்ளது. மாநிலத்துக்குள் பஸ் போக்குவரத்து துவக்குவது குறித்தும், மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்தை துவக்குவது குறித்தும், அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பல மாநிலங்களில், பஸ் போக்குவரத்தும் துவங்கியுள்ளது.இந்நிலையில், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:வரும், 25ம் தேதி முதல், உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை, குறைந்த எண்ணிக்கையில் செயல்படத் துவங்கும். இதற்கு தயாராக இருக்கும்படி, அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணியருக்கான நடைமுறை வழிமுறைகள் குறித்து, தனியாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.ஊரடங்கால், விமான நிறுவனங்கள் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பின், உள்நாட்டு விமான சேவை மீண்டும் துவங்குவது, மக்களுக்கும், விமான நிறுவனங்களுக்கும் நிம்மதியை அளித்து உள்ளது.


சிறப்பு விமானம்ஊரடங்கால், ஆஸ்திரேலியாவிற்கு திரும்ப முடியாமல் தவித்த, 210 பேர், நேற்று சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில், அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்தியாவில் சிக்கித் தவித்து வரும் பல்வேறு வெளிநாட்டினரை, தங்கள் நாட்டிற்கு திரும்ப அழைத்துச் செல்ல, சம்பந்தப்பட்ட நாடுகள், மத்திய அரசிடம், சிறப்பு விமானங்களை இயக்க அனுமதி பெற்றன.அதன்படி, ஆஸ்திரேலியா நாட்டின், சிட்னி நகரில் இருந்து, 'குவென்டாஸ் ஏர்வேஸ்' சிறப்பு விமானம், பயணியர் இல்லாமல், நேற்று முன்தினம் பகல், 2:05 மணிக்கு சென்னை வந்தது. சென்னையில் இருந்து, 210 பேருடன், அந்த விமானம், நேற்று பகல், 3:00 மணிக்கு, சிட்னி நகருக்கு புறப்பட்டுச் சென்றது.


வரவேற்புவிமான சேவை துவக்கம் குறித்த மத்திய அமைச்சரின் அறிவிப்பை, 'ஸ்பைஸ்ஜெட்' தனியார் விமான நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், அஜத் சிங் வரவேற்றுள்ளார்.' அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன். விமான சேவை துவக்கத்தின் மூலம், நாட்டின் பொருளாதாரம் குறித்த மக்களின் உணர்வுகளும் உயரும். மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான, விரைவான பயணச் சேவையை அளிக்கத் தயாராக உள்ளோம்' என, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
21-மே-202005:49:51 IST Report Abuse
blocked user கிருமி நாசினி தெளித்து, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக பயணிக்க வைக்க வேண்டும். தெனாவெடாக முகக்கவசத்தை எடுத்துட்டு சாப்பிடப்போகிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து நோயை பரப்பவோ அல்லது வாங்கவோ முயலக்கூடாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X