‛பிரதமர் பேச்சை கேட்டதால் 'கொரோனா' கட்டுக்குள் வந்தது

Updated : மே 22, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
‛பிரதமர் பேச்சை கேட்டதால் 'கொரோனா' கட்டுக்குள் வந்தது

புதுடில்லி : ‛தொற்றை அடையாளம் காண்பதில் நுண் அறிதலும், மிகப் பெரிய அளவிலான தனிமைபடுத்தலும், உடனடி சிகிச்சை முறைகளுமே, இந்தியாவில் ‛கொரோனா' பலி மற்றும் பரவலை, பெரிதும் கட்டுப்படுத்தியது' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

‛நாம்' எனப்படும் அணி சேரா நாடுகள் அமைப்பு, ஐ.நா., போன்று மிகப்பெரிய அமைப்பாகும். இதில் ஆசியா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த, 120 வளர்ந்து வரும் நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின், சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு, ‛வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது.

ஐரோப்பிய நாடான அஸர்பைஜானின் சுகாதாரத்துறை அமைச்சர், ஓக்டேய் ஷிராலியேவ், மாநாட்டுக்கு தலைமை வகித்தார்.

இதில் பங்கேற்ற, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், ஹர்ஷ் வர்தன் பேசியதாவது:
‛கொரோனா' வைரசை கட்டுப்படுத்துவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நாடு தழுவிய ஊரடங்குக்கு, 135 கோடி மக்களும் ஆதரவு தெரிவித்து, அந்த உத்தரவை மதித்து நடந்ததால் தான், அந்த கொடிய தொற்றை, இந்த அளவுக்கு எங்களால் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது.
தொற்றை அடையாளம் காண்பதில் நுண் அறிதலும், மிகப் பெரிய அளவிலான தனிமைபடுத்தலும், உடனடி சிகிச்சை முறைகளுமே, கொரோனா பலி மற்றும் பரவலை, இந்தியாவில் கட்டுக்குள் வைத்துள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
21-மே-202016:24:31 IST Report Abuse
Rajas மருத்துவ பணியாளர்களும், துப்புரவு பணியாளர்களும், போலீசும் வீதியில் இறங்கி கொரநா தடுப்பு பணியில் இருக்க, இவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. சுகாதார துறை சரியான முறையில் செயல்பட்டிருந்தால் கொரநா பற்றிய அபாயத்தை ஆரம்பகாலத்தில் உணர்ந்து கொண்டு இவ்வளவு பெரிய நஷ்டத்தை இந்தியாவில் தவிர்த்திருக்கலாம். ஒரு ரேப்பிட் கிட் சரியா சரியில்லையா என்று கூட தெரியாத நிலையில் தான் மத்திய சுகாதார துறை இருந்தது. இவர்களை வைத்து கொண்டு பிரதமர் கனவு காண்பது வீண்.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
21-மே-202008:17:56 IST Report Abuse
Thiagarajan Kodandaraman 200% CORRECT ,Salute to you and your dept and Police dept and related to the GOVT All Staff. Thank PM
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
21-மே-202005:58:00 IST Report Abuse
blocked user அதாவது தமிழன் அதிகப்பிர(சங்கி?) - ஆகையால் தமிழகத்தில் கரோனா வேகமாக பரவுகிறது என்று சொல்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X