பெர்லின் : கொரோனா பாதிப்பு அதிகரித்து ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் மேலும் 797 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நோய் தொற்றால் புதிதாக 83 பேர் பலியாகினர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,76,007 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புகளில் சிக்கி இதுவரை 8,090 பேர் பலியாகினர். நோய் தொற்றில் இருந்து இதுவரை 1,56,900 பேர் குணமடைந்தனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE