அரசியல் செய்தி

தமிழ்நாடு

விடுபட்ட நெசவாளர்களுக்கு ரூ.2,000 நிவாரணம்! ; முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு

Added : மே 20, 2020
Share
Advertisement
 விடுபட்ட நெசவாளர்களுக்கு ரூ.2,000 நிவாரணம்! ;  முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு

சென்னை : நெசவாளர்கள் நல வாரியத்தில், உறுப்பினர் ஆகாத நெசவாளர்களுக்கும், 2,000 ரூபாய், நிவாரணத் தொகை வழங்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், மார்ச், 24 முதல், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவு செய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள, 1.03 லட்சம் பேருக்கு, இரண்டு தவணைகளாக, தலா, 1,000 ரூபாய், வழங்கப்பட்டு வருகிறது.நல வாரியத்தில் பதிவு பெறாத, கைத்தறி நெசவாளர்கள், தங்களுக்கும் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். அதை பரிசீலித்த முதல்வர், அவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி, தமிழகம் முழுவதும், கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் நெசவாளர்கள் பட்டியல், 200 யூனிட் இலவச மின்சாரம் பெறும் நெசவாளர்கள் பட்டியலுடன் ஒப்பிடப்படும். அதன் அடிப்படையில், ஏற்கனவே உதவி பெற்றவர்கள் பட்டியலில், விடுபட்டுள்ள நெசவாளர்களுக்கு, 2,000 ரூபாய் நிவாரணத் தொகையை, கைத்தறித்துறை இயக்குனர் வழியே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.எனவே, தகுதியான நெசவாளர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள, கைத்தறி மற்றும் துணிநுால் துறைக்கு விண்ணப்பித்து, பயன்பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X