பொது செய்தி

தமிழ்நாடு

குடும்ப வன்முறை புகார்களுக்கு தீர்வு காண 'வாட்ஸ் ஆப்' குழு

Updated : மே 22, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : குடும்ப வன்முறை புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க, 'தாய் வீடு' என்ற, 'வாட்ஸ் ஆப்' குழு துவங்கப்பட்டிருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஊரடங்கு காலத்தில், அதிகரிக்கும் குடும்ப வன்முறையை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் மனு தாக்கல் செய்தார்.
குடும்ப வன்முறை புகார்களுக்கு தீர்வு காண 'வாட்ஸ் ஆப்' குழு

சென்னை : குடும்ப வன்முறை புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க, 'தாய் வீடு' என்ற, 'வாட்ஸ் ஆப்' குழு துவங்கப்பட்டிருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஊரடங்கு காலத்தில், அதிகரிக்கும் குடும்ப வன்முறையை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் மனு தாக்கல் செய்தார்.


துவக்கம்


இம்மனுவுக்கு, சமூக நலத்துறை செயலர் மதுமதி தாக்கல் செய்த, கூடுதல் அறிக்கை:குடும்ப வன்முறை புகார்களுக்கு தீர்வு காணும் அதிகாரிகளின் தொடர்பு எண் விபரங்கள், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலியில் உள்ள மகளிர் போலீஸ் நிலையங்களுடன் இணைந்த, மகளிர் சிறப்பு பிரிவு விபரங்களும் வழங்கப்பட்டுள்ளன.கிராமங்களில், குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள், அங்கன்வாடி ஊழியர்களை தொடர்பு கொள்ளலாம். அவர்கள், மாவட்ட சமூக நல அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பர்.
மாவட்ட சமூக நல அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகளின் தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.மாவட்டங்களில் இருந்து, சமூக நலத் துறை தினசரி அறிக்கை பெறுகிறது.
ஊரடங்கு நேரத்தில், 616 புகார்கள் பெறப்பட்டன. குடும்ப வன்முறை புகார்கள் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க, 'தாய் வீடு' என்ற, 'வாட்ஸ் ஆப்' குழு துவங்கப்பட்டுள்ளது.


விசாரணைஇதில், சமூக நலத்துறை செயலர், ஆணையர், மாவட்ட சமூக நல அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.குடும்ப வன்முறையை கட்டுப்படுத்த, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இவ்வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகினர். விசாரணையை, ஜூன், 5க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
22-மே-202005:36:01 IST Report Abuse
தல புராணம் பல குடும்பங்களிலே வன்முறையே வாட்ஸ்ஆப்பில் தான் ஆரம்பிக்கிறது.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
21-மே-202012:36:24 IST Report Abuse
Krishna All Anti-Men & ProWomen Fanatic Groups (Vestedly Lying & False Complaints) And All Case-Hungry, Unconstitutional Anti-Men Gender-Biased Grave AntiSocial Officials (Never Punishing False Women Complainants) Must be Mercilessly Punished by Broad-Based & Supreme Powered People-Rep Committees (51% all Opposition MP-MLA-Counsillors incl. Ex if Unavailable) as Rulers-All Officials (esp. Police & Judges) Have Become Vested Conspirators. All Others Must be Abolished to Save People & Wastage of Peoples Money.
Rate this:
Cancel
21-மே-202011:57:19 IST Report Abuse
ஆப்பு தாய் வீடா? அப்போ புருசங்காரன் அடிச்சா தாய்வீடு வந்துரலாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X