ஜெனிவா: கொரோனாவினால் ஆப்பிரிக்க மக்கள் கொடிய வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என ஐ.நா., கவலை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் ஏற்படுத்திய தாக்கத்தால் பல நாடுகள் கடும் பொருளாதார பாதிப்பையும் உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன. உலக அளவில் பொருளாதாரம் பின்னோக்கி சென்றுள்ளது. லட்சக்கணக்கில் மக்கள் வேலை இழந்துள்ளனர். உலகின் பல நாடுகளிலும் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,' கொரோனாவால் ஆப்பிரிக்க மக்கள் கொடுமையான வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஐ.நா., சபையின் தலைவர் ஆண்டோனியா குத்தரஸ் கூறும் போது, ' ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 2,500 பேர் பலியாகி உள்ளனர். நோய் தொற்றின் காரணமாக பலர் பாதிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் லட்சக்கணக்கான மக்கள்கொடிய வறுமைக்கு தள்ளப்படுவார்கள்' இவ்வாறு தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE