அரசியல் செய்தி

தமிழ்நாடு

பத்திரிகை துறை நெருக்கடியை களைய பா.ம.க., துணை நிற்கும்: அன்புமணி

Added : மே 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 பத்திரிகை துறை நெருக்கடியை களைய பா.ம.க., துணை நிற்கும்: அன்புமணி

சென்னை : 'அச்சு ஊடகங்களின் நெருக்கடியை களைவதற்கான நடவடிக்கை எடுக்க, பிரதமர் மோடியுடன், பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் பேசுவார்; கடிதம் எழுதுவார்' என, பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:இந்திய ஜனநாயகத்தின் நான்காவது துாணாக திகழும் ஊடகங்கள், கொரோனா நோய் பரவல் காரணமாக, ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தால், கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன.அரசின் கடமைநாடு நெருக்கடிகளை சந்திக்கும்போது, அவற்றில் இருந்து, மீண்டு வருவதற்கு, துணை நிற்கும் ஊடகங்களே, இப்போது நெருக்கடியை சந்திக்கும் நிலையில், அவற்றுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை.ஊடகங்களில் அச்சு ஊடகங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
அவை குறித்து விளக்குவதற்காக, 'தினமலர்' இல.ஆதிமூலம், 'இந்து' ராம், 'தினகரன்' ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர், என் இல்லத்தில் சந்தித்து பேசினர்.'செய்தித்தாள்களை அச்சிடுவதற்கான, நியூஸ் பிரின்ட் காகிதம் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்; அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் விளம்பரங்களுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.'அரசு ஊடகங்களின் விளம்பரக் கட்டணத்தை, 100 சதவீதம் உயர்த்த வேண்டும்' என்பது தான், அச்சு ஊடகத்துறையின் முதன்மையான கோரிக்கை. இது தொடர்பாக, பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அக்கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என்றும், அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதற்காக, அவர்கள் வழங்கிய கடிதத்தில், 'தினத்தந்தி' அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா ஆகியோரும் கையெழுத்திட்டு இருந்தனர். வலியுறுத்துவோம்என் இல்லத்தில் இருந்தபடி, பா.ம.க., நிறுவனர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர், 'அச்சு ஊடகங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் அனைத்தையும் நான் அறிவேன். மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்தில், ஊடகங்களுக்கு பா.ம.க., துணை நிற்கும்.'அச்சு ஊடகங்களின் பிரச்னைகள் குறித்து, பிரதமர் மோடியிடம் பேசுகிறேன்; அவருக்கு கடிதம் எழுதுகிறேன்.

அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு வரும் அனைத்து நெருக்கடிகளையும் களைவதற்கு, பா.ம.க., நடவடிக்கை எடுக்கும்' என, அவர் உறுதியளித்தார்.செய்தித்தாள்களின் தயாரிப்பு செலவு, அதன் விற்பனை விலையை விட பல மடங்கு அதிகம். அதிக அளவில் விளம்பரங்கள் வந்தால் மட்டும் தான் தயாரிப்பு செலவுக்கும், விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசத்தை சமன் செய்ய முடியும்.பொருளாதார நிலைமை சரியாகி, தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள் வருவதற்கு, இன்னும் பல மாதங்களோ, சில ஆண்டுகளோ ஆகக் கூடும்.

அதுவரை அச்சு ஊடகங்களுக்கு, அதிக விளம்பரங்கள், அதிக விளம்பரக் கட்டணம் ஆகியவற்றின் வாயிலாக, ஆதரவளிக்க வேண்டியது அரசின் தார்மீகக் கடமை. இதை மத்திய அரசிடம், எடுத்துக் கூறி, ஊடகங்களுக்கு உதவும்படி, பா.ம.க., வலியுறுத்தும்.இவ்வாறு, அன்புமணி கூறியுள்ளார்.* மார்க்சிஸ்ட் தலைவர்கள் உறுதி'பத்திரிகை துறையை பாதுகாக்க பிரதமரிடம் வலியுறுத்துவோம்''அச்சு ஊடகங்களின் கோரிக்கைகளை, அகில இந்திய பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி மற்றும் எம்.பி.,க்கள் வாயிலாக, பிரதமரிடம் வலியுறுத்தி, நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என, மார்க்சிஸ்ட் கம்யூ., தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடும் நெருக்கடிஅக்கட்சியின் அறிக்கை:மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர், கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர், டி.கே.ரங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பினர், க.கனகராஜ் ஆகியோரை, 'தினமலர்' இல.ஆதிமூலம், 'ஹிந்து' என்.ராம், 'தினகரன்' ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் சந்தித்து பேசினர்.கெரோனா தடுப்புக்கான ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், அச்சு ஊடகங்களான நாளிதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகள் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருவது குறித்தும், அதில் இருந்து மீள்வதற்கு அரசு செய்ய வேண்டியவை குறித்தும் எடுத்துரைத்தனர்.

பத்திரிகை அச்சு காகிதம் மீதான வரியை குறைக்க வேண்டும்; அரசு விளம்பரங்கள் தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும்; நெருக்கடி கருதி, அரசு விளம்பரக் கட்டணத்தை, 100 சதவீதம் உயர்த்தி தர வேண்டும்; அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு, முழுமையாக வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, கோரிக்கைகள் அடங்கிய மனுவை, பிரதமருக்கு அளித்திருப்பதையும் தெரிவித்தனர்.

இந்த கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்ற, மார்க்சிஸ்ட் கம்யூ., வலியுறுத்த வேண்டும்; அச்சு ஊடகங்கள் மக்களின் குரலாக செயல்பட துணை நிற்க வேண்டும் என்றும், வேண்டுகோள் விடுத்தனர்.நியாயமான கோரிக்கை இந்த கோரிக்கைகள் அனைத்தும் மிகவும் நியாயமானவை. ஜனநாயக நாட்டில் பத்திரிகை துறை மற்றும் ஊடகங்கள் மிகவும் கேந்திரமான பங்கு வகிப்பவை. மக்களது பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும், பெரும் கருவியாக விளங்கி வருகின்றன.

கொரோனா ஊரடங்கில் உள்ள மக்களுக்கு, பெரும் விழிப்புணர்வு அளிப்பதில், அச்சு ஊடகங்களின் பங்கு மகத்தானது. நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பத்திரிகை துறையை பாதுகாப்பது, சமூக நோக்கிலும் அத்தியாவசியமானது.அச்சு ஊடகங்கள் செயல்பட, குறைந்த பட்சம் அரசு செய்ய வேண்டிய கோரிக்கைகள்தான் இவை. ஊடகங்களின் கருத்து சுதந்திரத்திற்கும், நடுநிலைத் தன்மையோடு செயல்படுவதற்கும், எப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூ., துணை நின்று வருகிறது.

அச்சு ஊடகங்களின் கோரிக்கைகளை, கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி மற்றும் எம்.பி.,க்கள் வாயிலாக, பிரதமர் மோடியின் கவனத்திற்கு எடுத்து சென்று, நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பதாகவும், மாநில தலைவர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
21-மே-202013:30:41 IST Report Abuse
RajanRajan கட்சி பாகுபாடு இல்லாமல் அத்தனை பேரும் ஒண்ணா ....
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
21-மே-202012:43:30 IST Report Abuse
s.rajagopalan கட்சி சார்பற்ற பத்திரிகைகளுக்கு மட்டுமே அரசு உதவ வேண்டும். அவர்களுக்கு தேவையான உதவிகளை கட்சிகளே அளிக்க வேண்டும். மக்கள் வரி பணத்தை இதற்கு செலவு செய்ய கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X