சென்னை : 'கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், உடற்பயிற்சி மையங்களில், புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்' என, உடற்பயிற்சி மைய சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.
உடற்பயிற்சி மையங்களை திறக்க அனுமதிக்க வேண்டி, உடற்பயிற்சி மையங்களின் சங்க நிர்வாகிகள், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கொரோனா ஒழிப்பை, தமிழக அரசு திறமையாக கையாண்டு வருகிறது. இதற்காக, எங்கள் சார்பில் பாராட்டுகள். கடன் சுமைஇந்நேரத்தில், சிறு வணிகர்கள் மற்றும் தொழில்கள் பாதிக்காமல், அரசு எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. உடற்பயிற்சி மையங்களும் பெரிதும் பாதித்துள்ளன. பெரும்பாலானோர், வங்கி கடன் பெற்றே பயிற்சி மைய உபகரணங்களை நிறுவியுள்ளனர். 60 நாட்களாக வருமானமின்றி, மிகவும் கஷ்டப்படுவதோடு, கடன் சுமைக்கும் ஆளாகியுள்ளோம்.
எனவே, பயிற்சி மையத்தை திறக்க, அரசு அனுமதிக்க வேண்டும். நோய் தொற்று ஏற்படாமல், அரசின் வழிமுறைகளை பின்பற்றுவோம் என, உறுதி தருகிறோம். இந்நேரத்தில், மையத்தின் வாடகை மட்டுமின்றி, கடந்த மாத பயன்பாட்டு அடிப்படையில் வசூலிக்கப்படும், மின் கட்டணம் சுமையாகியுள்ளது. பயன்படுத்தாத நிலையில், மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கு, அரசு தீர்வு காண வேண்டும்.மையங்களில் எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்:l உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் மின் துாக்கி பயன்படுத்த அனுமதி கிடையாது.
பயிற்சியாளர்கள், உறுப்பினர்கள், துாய்மை பணியாளர்கள் அனைவரும், நுழைவுவாயிலில் அகச்சிவப்பு வெப்பமானி மூலம் சோதிக்கப்பட்டு, கைகளை சுத்தப்படுத்த கிருமி நாசினி வழங்கப்படும்l ஒவ்வொரு உறுப்பினரும், பணியாளரும் முக கவசம் மற்றும் கையுறைகளை, எந்நேரமும் அணிய வேண்டும். உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள், சொந்தமாக தண்ணீர் பாட்டிலை எடுத்து வர வேண்டும்l குழுவாக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள், ஜூன் இறுதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்l ஒவ்வொரு உறுப்பினரின் பயிற்சி நேரம், அதிகபட்சம், 60 நிமிடம். 'ஏசி' இல்லாமல், இயற்கை காற்றோட்டம் மற்றும் விசிறி மட்டுமே பயன்படுத்தப்படும்
நீராவி குளியல் நிறுத்தம்l ஊழியர்கள் அவ்வப்போது பரிசோதிக்கப்படுவர். தும்மல், இருமல் மற்றும் காய்ச்சல் உள்ள எவரும், 'ஜிம்'மிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்l கைத் துடைக்க துணி மற்றும் டெட்டால் கலந்த கிருமி நாசினி பாட்டில்கள், ஒவ்வொரு மூலையிலும் வைக்கப்படும். உறுப்பினர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன், உபகரணங்களைத் துடைக்க வேண்டும்l நீராவி குளியல் தற்காலிகமாக, ஜூன் இறுதி வரை நிறுத்தப்படும். 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு, முதல்வரிடம் அளித்த மனுவில் உறுதி அளித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE