பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு கருவி

Added : மே 20, 2020
Share
Advertisement

சென்னை : குறுவை சாகுபடிக்கு தேவைப்படும் வேளாண் கருவிகள், டிராக்டர்கள் போன்றவற்றை, விவசாயிகளுக்கு, குறைந்த வாடகைக்கு வழங்குமாறு, டெல்டா மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாயிகளுக்கு, பயிர் கடன் வழங்குவதுடன், உரம், விதை போன்றவற்றை விற்பனை செய்கிறது.டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், குறுவை நெல் சாகுபடி செய்வதற்காக, சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து, ஜூன், 12ல், தண்ணீர் திறக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் உள்ள, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன்கள் வழங்க, அம்மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு, மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 2,500 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

மேலும், 'போதிய அளவில் உரம் மற்றும் விதைகளை இருப்பில் வைக்க வேண்டும்.'நடவு இயந்திரங்கள், டிராக்டர்கள், உழவு இயந்திரங்கள், வேளாண் கருவிகள் போன்றவற்றை, விவசாயிகளுக்கு, குறைந்த வாடகைக்கு வழங்க வேண்டும்' என, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X