இ- - சேவை மையம் திறக்க அரசு உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இ- - சேவை மையம் திறக்க அரசு உத்தரவு

Added : மே 20, 2020
Share

சென்னை : சென்னை மாவட்டம் தவிர்த்து, பிற மாவட்டங்களில், அரசு கேபிள் நிறுவனத்தின் கீழ் செயல்படும், அரசு இ- - சேவை மையங்கள் மற்றும் 'ஆதார்' சேர்க்கை மையங்களை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மேலாண்மை இயக்குனர் சங்கர் அனுப்பியுள்ள கடிதம்:அரசு கேபிள் நிறுவனம் கீழ் செயல்படும், அனைத்து அரசு இ- - சேவை மையங்கள், ஆதார் சேர்க்கை மையங்களை, சென்னை தவிர்த்து, பிற மாவட்டங்களில், கலெக்டர் ஒப்புதலுடன், செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மையங்களை, திறக்க வேண்டாம்.மையத்தில் பணிபுரியும் அனைவரும், முக கவசம் அணிய வேண்டும்.

கிருமி நாசினி உபயோகித்து, 30 நிமிடங்களுக்கு ஒரு முறை, கையை சுத்தம் செய்ய வேண்டும்.ஆதார் மையத்தில், பயோமெட்ரிக் கருவியில், பதிவு மேற்கொள்ளும்போது, ஒவ்வொரு முறையும், கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்கள் கையுறை அணிந்து, ஆவணங்களை கையாள வேண்டும்.ஆதார் சேர்க்கை மையம் மற்றும் இ- - சேவை மையங்களுக்கு வருவோர், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பொது மக்கள் கூட்டம் கூடுவதை அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X