உலக சுகாதார அமைப்பு செயற்குழு தலைவராக ஹர்ஷ் வர்த்தன் நாளை பொறுப்பேற்கிறார்

Added : மே 20, 2020
Share
Advertisement

புதுடில்லி : மத்திய அமைச்சர், ஹர்ஷ் வர்த்தன், உலக சுகாதார அமைப்பின், செயற்குழு தலைவராக, நாளை பொறுப்பேற்க உள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் செயற் குழுவில், 34 நாடுகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.இவர்களின் பதவிக் காலம், மூன்று ஆண்டுகள். தற்போது, இக்குழுவின் தலைவராக, ஜப்பானைச் சேர்ந்த, ஹிரோகி நகாடனி உள்ளார். அங்கீகரிப்புஇவரது பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, புதிய தலைவராக, ஹர்ஷ் வர்த்தன் பொறுப்பேற்க உள்ளார். இதற்கான தீர்மானத்தை, 194 நாடுகள் அடங்கிய, உலக சுகாதார சபை அங்கீகரித்துள்ளது.

நாளை, சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில், உலக சுகாதார அமைப்பின், 147வது செயற்குழு கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெறுகிறது. இதில், ஹர்ஷ் வர்த்தன் செயற்குழு தலைவராக பொறுப்பேற்பார். முக்கியத்துவம்உலக நாடுகள் கொரோனா பாதிப்பைச் சந்தித்துள்ள சூழலில், ஹர்ஷ் வர்த்தன், உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக பொறுப்பேற்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது, கொரோனா பரவ, சீனாவும், அதற்கு துணையாக உலக சுகாதார அமைப்பும் உள்ளதாக, அமெரிக்க அதிபர், டிரம்ப் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X