காத்மாண்டு : இந்தியாவின் உத்தரகண்டில் உள்ள சில பகுதிகளை, தங்களுடையது என, அண்டை நாடான நேபாளம் உரிமை கொண்டாடுகிறது. இது தொடர்பாக, புதிய தேசிய வரைபடத்தை வெளியிட முடிவு செய்துள்ள நிலையில், 'நேபாளத்தில், இந்தியா வைரஸ் பரப்புகிறது; அது மிக ஆபத்தானதாக உள்ளது' என, நேபாள பிரதமர், கே.பி.ஒலி கூறியுள்ளார்.
கடந்த, 1962ல், சீனாவுடன் நடந்த போரின்போது, லிம்பியதுரா, காலாபானி, லிபுலெக் பகுதிகளை, இந்தியா கைப்பற்றியது. அந்தப் பகுதிகள், உத்தரகண்ட் மாநிலத்தின் எல்லைக்குள் வருகின்றன. இந்நிலையில், '1816ல் பிரிட்டன் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்தப் பகுதிகள் எங்களுக்கு சொந்தமானது' என, நேபாளம் கூறி வருகிறது.சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு செல்வதற்காக, லிபுலெக் வழியாக புதிய சாலை அமைக்கப்பட்டது.
அதையடுத்து, லிபுலெக் உள்ளிட்டவை தன் பகுதி என, நேபாளம் தொடர்ந்து கூறி வருகிறது. இவற்றையும் இணைத்து புதிய தேசிய வரைபடத்தை வெளியிடவும், அந்த நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த நிலையில், அந்த நாட்டின் பிரதமர், கே.பி.ஒலி, பார்லி.,யில் நேற்று பேசியதாவது: கொரோனா வைரசை இந்தியா பரப்பி வருகிறது. அங்கிருந்து, சட்டவிரோத வழிகளில் வருபவர்களால் இந்த வைரஸ் பரப்பப்படுகிறது. இதனால், நம் நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து வரும் வைரஸ், சீனா மற்றும் இத்தாலியில் உள்ளதைவிட மிக வீரியமாக உள்ளது. காலாபானி உள்ளிட்ட பகுதிகளை விரைவில் மீட்போம்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE