சென்னை : குறுவை பருவ நெல் சாகுபடிக்கு தேவையான உர வகைகளை, டெல்டா மாவட்டங்களில் இருப்பு வைக்க, வேளாண் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, டெல்டா மாவட்டங்களில், யூரியா, 18 ஆயிரத்து, 800 டன்; டி.ஏ.பி., 26 ஆயிரத்து, 490 டன்; பொட்டாசியம், 16 ஆயிரத்து, 100 டன்; கூட்டு உரங்கள், 41 ஆயிரத்து, 800 டன் உரங்கள் கையிருப்பில் உள்ளன.காரைக்கால் துறைமுகத்தில் இருந்து, 27 ஆயிரம் டன், யூரியா வந்து கொண்டு இருக்கிறது; துாத்துக்குடி துறைமுகத்திற்கு, 44 ஆயிரம் டன்கள் யூரியா வரவுள்ளது. இவை, ரயில் வாயிலாக டெல்டா மாவட்டங்களுக்கு எடுத்து வரப்பட உள்ளது. இதன் வாயிலாக குறுவை சாகுபடி தேவையை சமாளிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE