அடிப்படை வசதிகளின்றி நல்லாளக்குப்பம் மக்கள் சிரமம்

Added : மே 20, 2020
Share
Advertisement
உளுந்துார்பேட்டை; திருநாவலுார் ஒன்றியத்தில் நல்லாளக்குப்பம் கிராமத்தில் அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.திருநாவலுார் அடுத்த ஆரியநத்தம் ஊராட்சியில் நல்லாளக்குப்பம் கிராமத்தில் கடந்த 1985ம் ஆண்டு 48 பேருக்கு, தமிழக அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த வீடுகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மேற்கூரைகள் பெயர்ந்து, எந்த

உளுந்துார்பேட்டை; திருநாவலுார் ஒன்றியத்தில் நல்லாளக்குப்பம் கிராமத்தில் அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.திருநாவலுார் அடுத்த ஆரியநத்தம் ஊராட்சியில் நல்லாளக்குப்பம் கிராமத்தில் கடந்த 1985ம் ஆண்டு 48 பேருக்கு, தமிழக அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த வீடுகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மேற்கூரைகள் பெயர்ந்து, எந்த நேரத்திலும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.மேலும், இங்குள்ள மக்கள் வெளிப்பகுதிக்கு சென்று வர போதிய சாலை வசதிகள் இல்லை. செடிகள் அடர்ந்துள்ள ஒத்தையடி பாதையிலே மக்கள் அச்சத்தோடு செல்லும் நிலை நீடிக்கிறது. இங்கு தெருவிளக்குகள் கூட இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.இது போன்ற சூழலில், கடந்த 6 மாதங்களுக்கு முன் திருநாவலுார் பி.டி.ஓ., அதிகாரிகள் மற்றும் ஆரியநத்தம் ஊராட்சி அலுவலர்கள் இணைந்து நல்லாளக்குப்பம் கிராமத்தில் உள்ள 42 பேருக்கு தனிநபர் கழிவறை கட்டித் தருவதாக கூறி தலா 12 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர்.ஆனால், இங்கு அந்த பணிகளை கூட சரிவர முடிக்காமல், கழிவறைகளுக்கு கதவுகள் கூட போடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இங்குள்ள மக்கள் வெளிப்பகுதிகளில் உள்ள கழிவறையில் பணம் கொடுத்து சென்று வருகின்றனர்.கொரோனா தடுப்பு பணிகளில் அரசு முழு கவனம் செலுத்தி வருவதாகவும், இந்த பணிகள் முடிவடைந்த பின், அந்த கிராமத்தில் உள்ள தனிநபர் கழிவறை தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு செய்து நிவர்த்தி செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.நல்லாளக்குப்பம் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X