ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு பயன் 'ஆயுஷ்மான் பாரத்' குறித்து மோடி பெருமிதம்

Added : மே 20, 2020
Share
Advertisement

புதுடில்லி, : 'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், இரண்டு ஆண்டுகளுக்குள், ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கடந்த, 2018 செப்டம்பரில், உலகின் மிகப்பெரிய சுகாதார மருத்துவக் காப்பீடு திட்டமான, 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். ஏழை எளிய மக்களுக்கு, உயர்தரமான அதிநவீன மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க, இத்திட்டம் வழிவகுக்கிறது. நாட்டில் உள்ள, 10 கோடி ஏழை குடும்பங்கள், மருத்துவக் காப்பீடு பெறும் வகையில், இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 50 கோடிக்கும் அதிகமானோர், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு பெறும் வகையில், திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், இத்திட்டம் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதற்குள், ஒரு கோடிக்கும் அதிகமானோர், பயன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு, 13 ஆயிரத்து, 412 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, 'டுவிட்டர்' சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் மூலம் பயன் அடைந்த அனைத்து குடும்பத்தினரும், நல்ல ஆரோக்கியம் பெற, இறைவனை பிரார்த்திக்கிறேன்.இத்திட்டத்தில் பணியாற்றிய அனைத்து டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் தன்னலமற்ற பணிக்கு வாழ்த்துக்கள். உங்களால் தான், இது சாத்தியமானது.

இத்திட்டம், நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இதில் பதிவு செய்துள்ளவர்கள், தங்கள் மாநிலங்களில் மட்டுமல்லாமல், நாட்டின் எந்த மூலையிலும், தரமான உயர்தர சிகிச்சையைப் பெற முடியும்.வட கிழக்கு மாநிலமான, மேகாலயாவை சேர்ந்த, பூஜா தாபா என்ற பெண்ணுக்கு, இத்திட்டத்தின் கீழ், சமீபத்தில் அறுவை சிகிச்சை செயய்யப்பட்டது. இவர், 'ஆயுஷ்மான் பாரத்'தின் ஒரு கோடியை எட்டிய பயனாளர்.சமீபத்தில், பூஜாவிடம், தொலைபேசி வாயிலாக உரையாடியது, மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, தன், 'டுவிட்டர்' பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X