ஒரே நாளில் 5,611 பேர் பாதிப்பு; பலி 3,303

Added : மே 20, 2020
Share
Advertisement

புதுடில்லி : இதுவரை இல்லாத வகையில், 24 மணி நேரத்தில், கொரோனாவால், 5,611 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, நேற்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை : நம் நாட்டில் கடந்த, 24 மணி நேரத்தில், முதன் முறையாக, 5,611 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 140 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1 லட்சத்து, 6,750 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக, 3,303 பேர் பலியாகியுள்ளனர்.கொரோனா நோயாளிகளில், 61 ஆயிரத்து, 149 பேர் சிகிச்சையில் உள்ளனர். 42 ஆயிரத்து, 297 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமானோர் எண்ணிக்கை, 39.62 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நேற்று பலியானோரில், 75 பேர் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். குஜராத்தில், 25 பேர்; மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில், தலா, 6 பேர்; உ.பி., ராஜஸ்தானில், தலா 5 பேர்; தமிழகம், கர்நாடகா, தெலுங்கானாவில், தலா, மூன்று பேரும் உயிரிழந்து உள்ளனர். ஆந்திரா, அசாம், ஜம்மு - காஷ்மீரில், தலா இருவரும், ஒடிசா, பஞ்சாபில், தலா ஒருவரும், கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.இறப்பு எண்ணிக்கையில், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

அங்கு,1,325 பேர் உயிரிழந்து உள்ளனர். அடுத்து, குஜராத்தில், 719 பேர்; மத்திய பிரதேசத்தில், 258 பேர்; மேற்கு வங்கத்தில், 250 பேர்; டில்லியில், 168 பேர்; ராஜஸ்தானில், 143 பேர்; உ.பி.,யில், 123 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில், 84 பேர்; ஆந்திராவில், 52 பேர்; கர்நாடகாவில், 40பேர்; தெலுங்கானா மற்றும் பஞ்சாபில், தலா, 38 பேர் பலியாகியுள்ளனர்.ஜம்மு - காஷ்மீரில்,17 பேர்; ஹரியானாவில், 14 பேர்; பீஹாரில், ௯ பேர்; ஒடிசாவில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X