பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டரை காண வந்த 'கொரோனா பெண்!'

Added : மே 20, 2020
Share
Advertisement
 கலெக்டரை காண வந்த 'கொரோனா பெண்!'

கோவை:நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கோரி, கோவை கலெக்டர் அலுவலகத்தில், நடன கலைஞர்கள் மனு அளித்தனர். கொரோனா வைரஸ்வடிவ உடை மற்றும் ஒப்பனையுடன், வந்த ஒரு பெண் கலைஞர், அனைவரையும் கவர்ந்தார்.ஊரடங்கு காரணமாக, இரண்டு மாதங்களாக எவ்வித நிகழ்ச்சிகளும் நடைபெறாததால், நடன கலைஞர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, நடன கலைஞர்கள் கூறியதாவது:நிகழ்ச்சிகள் ஏதும் இன்றி, வருமானம் இழந்து நிற்கிறோம். இத்தொழில் நலிவடைந்து விடாமல் பாதுகாக்க, 'சேவ் அண்டு சப்போர்ட் டான்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' என்ற அமைப்பை துவக்கி, அதன் மூலம் கிடைத்த உதவிகளை கொண்டு, இத்தொழிலை நம்பி வாழ்பவர்களுக்கு உதவுகிறோம்.கோவை மாநகரில் மட்டும், 45 'டான்ஸ் ஸ்டூடியோக்கள்' உள்ளன. அனைத்தும் வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன.வருமானம் இல்லாததால், இரண்டு மாதங்கள் வாடகைக்கு விலக்கு அளிக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பனை கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் நடன நிகழ்ச்சிகளை நடத்த அனுமதியளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X