பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு பஸ்கள் இயக்கம்

Added : மே 20, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் அலுவலகம் வந்து செல்ல பயணச்சீட்டு அடிப்படையில் நேற்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி அரசு ஊழியர்கள் மட்டும் வந்து செல்ல பயணச்சீட்டு அடிப்படையில் அரசு பஸ்கள் இயக்குவதற்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளருக்கு, கலெக்டர் கிரண்குராலா பரிந்துரை செய்தார்.அதில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் ஆகிய பகுதியிலிருந்து இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 8:00 மணியளவில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலத்திலிருந்து உளுந்துார்பேட்டை வழியாக விழுப்புரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.அதேபோன்று, கள்ளக்குறிச்சி - திருக்கோவிலுருக்கும், திருக்கோவிலுாரில் இருந்து சங்கராபுரம் வழியாக சின்னசேலத்திற்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில், 3 பேர் அமரக்கூடிய இருக்கையில் 2 பேர், இருவர் அமரக்கூடிய இருக்கையில் ஒருவர் என சமூக இடைவெளியைக் கடைபிடித்து ஊழியர்கள் பயணம் செய்தனர்.மேலும், குறிப்பிடப்பட்டுள்ள வழித்தடங்கள் வழியாக நாள்தோறும் அரசு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X