பொது செய்தி

தமிழ்நாடு

'மின்மதி' செயலி பதிவிறக்க அறிவுறுத்தல்

Added : மே 20, 2020
Share
Advertisement

கோவை:மகளிர் சுய உதவிக்குழுக்கள், 'மின்மதி' செயலியை தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து, கலெக்டர் ராஜாமணி கூறியிருப்பதாவது:அனைத்து மகளிர் மேம்பாடு மற்றும் சுகாதாரம், பொருளாதாரம், சார்ந்த பயன்பாட்டுக்கு உதவும் வகையில், 'மின்மதி செயலி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பெண்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு, கோவிட்-19, சுயதொழில் பயிற்சிகள், வங்கிக்கடன், கால்நடை வளர்ப்பு, சிறுதானிய பயன்பாடு, அழகு குறிப்புகள், உள்ளிட்ட பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில், செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.கோவையில் உள்ள, 10 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மின்மதி செயலியை பதிவிறக்கம் செய்து, அரசின் நலத்திட்ட உதவிகளை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X