பொது செய்தி

தமிழ்நாடு

பிற்படுத்தப்பட்டோர் ஜாதிச்சான்று வழங்க குழு

Added : மே 20, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; ஈழுவா, தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தபட்டோர் ஜாதிச்சான்றிதழ் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு, கோரிக்கை, முறையீடுகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க விரும்புவோர் வரும் 26ம் தேதிக்குள் அனுப்பலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.கலெக்டர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தபட்டோர் ஜாதிச்சான்றிதழ் வழங்க கோரும் முறையீடுகளை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாணை எண்.39ல் கோரப்பட்டுள்ளது. இதற்காக பிற்படுத்தபட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களை கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி தலைவராக நியமித்து 4 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளது.இது தொடர்பாக குழுவிற்கு கோரிக்கைகள், முறையீடுகள் மற்றும் ஆவணங்களை சமர்பிக்க விரும்புவோர், வரும் 26ம் தேதிக்குள் கள்ளக்குறிச்சி கலெக்டரிடமோ அல்லது குழுவின் உறுப்பினர் செயலர், மிக பிற்படுத்தபட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர், எழிலகம் விரிவாக்க கட்டடம், 2ம் தளம், சேப்பாக்கம், சென்னை -5 என்ற முகவரிக்கு எழுத்து பூர்வமாக தபால் மூலமும் மற்றும் மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X