அரசியல் செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் ; உதயநிதி மனு

Added : மே 20, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
 10ம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் ; உதயநிதி மனு

சென்னை : 'கொரோனா நோய் பரவல் குறைந்து, சகஜ நிலை திரும்பும் வரை, பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்' என, அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி மனு அளித்தார்.

உதயநிதி தலைமையில், மாணவர் அணி செயலர் எழிலரசன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், நேற்று சென்னை, தலைமைச் செயலகத்தில், அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:பல பள்ளி வளாகங்கள், தனிமைப்படுத்தப் பட்டோருக்கான இருப்பிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. அங்கு, மாணவர்களை தேர்வு எழுத சொல்வது, நோய் தொற்றுக்கு வழிவகுக்கும். கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்கள், எப்படி தேர்வு எழுதுவர் என்ற கேள்விக்கு, விடை இல்லை.

கொரோனா தொற்று ஏற்பட்ட மாணவர்களுக்கு, தேர்வு எழுத விலக்கு அளிக்கப்படுமா; நோய் தொற்று அபாயத்தில் இருந்து விடுபட்டு, மாணவர்கள் தங்கள் பாடங்களை, நல்ல முறையில் திருப்புதல் செய்த பின், தேர்வு நடத்துவதே சரியான அணுகுமுறை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.பின், உதயநிதி, நிருபர்களிடம் கூறியதாவது:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை, ஜூன், 1ம் தேதி நடத்தப் போவதாக அறிவித்தனர். மே, 31 வரை ஊரடங்கு இருப்பதால், தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதைத் தொடர்ந்து, தேர்வை, ஜூன், 15க்கு அரசு ஒத்தி வைத்துள்ளனர்; அதற்கு நன்றி.சென்னையில், கொரோனா நோய் அதிகரித்துள்ளது.

எனவே, நோய் பரவல் குறைந்து, சகஜ நிலை திரும்பும் வரை, தேர்வை மேலும் ஒத்திவைக்கும் படி, அமைச்சர் செங்கோட்டையனிடம், கோரிக்கை மனு அளித்துள்ளோம். நல்ல முடிவு எடுப்பதாக, அமைச்சர் தெரிவித்தார்.ஒரு வகுப்பறையில், பத்து மாணவர்களை அமர வைப்பதாக கூறியுள்ளனர். அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை, உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
22-மே-202006:11:34 IST Report Abuse
 Muruga Vel அடுத்து கனி மொழியின் மகன் ஆதித்தியா என்ன அறிக்கை விடுவாரோ ..
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
21-மே-202016:05:08 IST Report Abuse
Baskar இவனுக்கும் கல்வித்துறைக்கு என்ன சம்பந்தம்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
21-மே-202013:50:37 IST Report Abuse
RajanRajan கோபாலபுரத்துக்கும் கல்விக்கு என்னே ஒரு சம்பந்தமாடோ. அப்துல்காதருக்கும் அம்மாவாசைக்கும் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X